Saturday, November 21, 2009

எப்போ விடியும்???

மழை விட்டும் தூவானம் விடலை என்பதைப் போல் மழை ஓரளவு குறஞ்சும் எங்க தெருவோட நிலைமை இது. தமிழ்நாட்டில் பல தெருக்களின் நிலைமை இதுதான் என்றாலும் அங்கே எல்லாம் சாலை போட்டும் இப்படி ஆகி இருக்கும். எங்க தெருவிலோ சாலை போடறதுனா என்னனு எங்களுக்கே மறந்துபோச்சு. இந்த அழகிலே பக்கத்து அடுக்குமாடிக்குடியிருப்பிலே அவங்க செப்டிக் டாங்க் தண்ணீரை வேறே இருபத்துநான்கு மணி நேரமும் மழைநீர் வடிகாலுக்குனு தோண்டிய கால்வாயில் விட்டுடறாங்க. துர்நாற்றம் தாங்கலை என்பதோடு கொசுக்களின் இம்சைவேறே. காலம்பர ஐந்து மணிக்கு வாசல் தெளிக்கப் போனால் கொசுக்களின் முற்றுகை, தெருவிளக்கு வேறே லேசாக் காத்தடிச்சாலே எரியாது. அந்த இருட்டு, தண்ணீரிலே குடிவந்த, குடி இருக்கும், குடிவரப் போகும் சுப்புக்குட்டிகள், அவற்றின் உணவான தவளை, பெரிய தவளை பார்த்திருக்கீங்களா? பச்சைநிறத்தில் ஒரு பூனைக்குட்டி சைசுக்கு இருக்கு. அதுவும் வந்துடும். இப்படி சகல ஜீவராசிகளின் துணையோடு தான் வாசல் தெளிப்பு. மர்மக் கதைகளில் வராப்பல திக் திக்னு இருக்கும். இதுக்கு என்னிக்கு விடிவு?

இந்த வாரம் இந்து தினசரிப் பத்திரிகையின் டவுன் டவுன் நியூஸ் பக்கத்தில் எங்க தெருவோட அழகையும், உள்ளாட்சித் துறை அமைச்சர், முதல் அமைச்சர்னு போய் முறையிட்டதையும் நாங்க சொல்லிப் புலம்பி இருக்கிறதைப் போட்டிருக்காங்க. ஏதோ இனியாவது விடிவு கிடைக்காதா என்ற நப்பாசைதான்!

4 comments:

  1. /இந்த வாரம் இந்து தினசரிப் பத்திரிகையின் டவுன் டவுன் நியூஸ் பக்கத்தில் எங்க தெருவோட அழகையும்,//
    எந்து பேப்பரிலே போட்டா என்ன ஒண்ணும் நடக்காது. வேற இடம் பாருங்க!

    ReplyDelete
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இருக்கே??? விட்டுடுவோமா என்ன???? :P:P:P:P:P

    ReplyDelete
  3. சீக்கிரமே சரியாகட்டும் .நான் வரலாம் என்றிருக்கிறேன்

    ReplyDelete
  4. கோமா, இதைவிட மோசமா இருக்கும்போதே நிறைய நண்பர்கள் வந்துட்டாங்க. இதுக்கே அசந்தா எப்படி??? இப்போ ரோடு போடும் வேலையும் ஆரம்பிச்சு ரப்பிஷ் கொட்டி நிரவி, ரோட் ரோலர் ஓட்டி இருக்காங்க. அதனால் கொஞ்சம் பரவாயில்லை. படம் எடுக்கணும், என்னமோ தள்ளிப் போயிட்டே இருக்கு! எப்போ வேணாலும் வாங்க! நல்வரவு.

    ReplyDelete