Friday, December 31, 2010

நீலவானம், பச்சைவயல், கறுப்பு சாலை!

 
Posted by Picasa
காரிலே போகும்போது தெரிந்த ஒரு காட்சியைப் படம் பிடிக்க நினைத்தால் காரின் வேகத்துக்கு என்னால் ஈடுகட்ட முடியலை. என்றாலும் இயன்றவரையில் நீலவானப் பின்னணியில் பச்சை வயல்களும், அதிலே கருநீலப் பின்னணியோடு கூடிய சாலையையும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் எடுத்திருக்கேன்.

வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!

Thursday, December 30, 2010

காய்களால், பழங்களால் அலங்காரம்!

பழங்கள், காய்களால் அலங்கரிக்கப்படும் சிதம்பரம் கோயிலின் கீழ வாசல். நடராஜர் என்னமோ தெற்கே பார்த்துட்டு இருந்தாலும் கீழவாசல் வழியாக வெளியே வந்து தேருக்குப் போவதாலும், அதே வாசல் வழியாக உள்ளே நுழைவதாலும் இதுவே பிரதான வாயிலாக அலங்கரிக்கப் பட்டது. எல்லா கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் தோரணங்கள் தொங்கினாலும் கீழவாசலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். இதைத் தவிர மற்ற நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தடா! :(

Monday, December 27, 2010

ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை!


பகவான்

நவராத்திரியின் போது திடீர்ப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டும் போனோம். சுற்றுலாக் குழுவோடு சென்றதாலும் செல்லும்போதே மூன்று மணி ஆகிவிட்டதாலும் மற்ற ஆசிரமங்கள் போக முடியலை. கிரிவலப் பாதையில் முதலில் வந்தது ஸ்ரீரமணாஸ்ரமம். அவங்க அநுமதியோடு எடுத்த சில படங்கள் இங்கே ஒவ்வொன்றாய்க் காணலாம்.
தியான மண்டபம்.
பகவான் அண்ணாமலைக்கு வந்தபோது சிறுவனாக இருந்த நிலையில் எடுத்த ஓவியப் படம்.
தியானம் செய்யும் பெரிய கூடம்.

Sunday, December 12, 2010

உம்மாச்சி காப்பாத்தும்மா! :)

உம்மாச்சி காப்பாத்தும்மா.