எங்க ஊரான பரவாக்கரையில் மாரியம்மன் கோயிலும், கீழே இருப்பது கோயில் குளமும். குளத்தின் ஒரு கோணம் மட்டுமே தெரிகிறது. பின்னாலே தெரியறது மலை எல்லாம் இல்லை. மரங்கள், வயல்களில் இருக்கும் பெரிய மரங்கள். வெளிச்சம் இல்லாததால் சரியாய் வரலைனு நினைக்கிறேன்.
இது நாங்க போன வருஷம் தென் மாநிலங்களில் பயணம் செய்தப்போ எடுத்தது. காலை வேளையில் புலர்ந்தும், புலராமலும் இருக்கும் பொழுதில் , எடுக்கப் பட்ட படம். என் மனதைக் கவர்ந்த படங்கள் இம்மாதிரி சில இருக்கின்றன. அவை இங்கே வரும். இது ஒரு ஆரம்பம் தான்.