Sunday, December 9, 2012

இனிக்கும் இனிய காலையும், மயக்கும் மாலைப் பொழுதும்!


ஸ்ரீரங்கம் வீட்டில் காலை நடைப்பயிற்சிக்குச் செல்கையில் உதயசூரியனின் பொன்னிறக் கிரணங்களைப் பார்க்கையில் தினம் படம் எடுக்கச் சொல்லும்.  ஒரு நாள் முயன்றது இது.

இது ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் கருமேகங்கள் சூழக் காட்சி அளித்த வானம். கடலில் நீந்தும் நீர் வாழ் ஜந்துக்களைப் போன்ற தோற்றம் கிடைக்க க்ளிக்கினேன். 

Sunday, December 2, 2012

கார்த்திகை தீபம் எங்க குடியிருப்பில்!


எங்க குடியிருப்பில் எதிர் வீடுகளில் கலர்க்கோலங்கள் போட்டு தீபங்களை வைத்திருந்த காட்சி. 

Friday, October 12, 2012

சூரியக் கொண்டாட்டம்!


இரண்டு நாட்களாக ரயிலில் வந்தப்போ, மாலைச் சூரியனைப் பார்த்ததும் செல்லினேன்.  சுமாரா வந்திருக்குனு நினைக்கிறேன்.  எது என்னிக்கு எடுத்ததுனு பார்த்துக் கண்டு பிடிச்சுக்குங்க. :))))
Thursday, July 5, 2012

நிலா நிலா ஓடி வா, நில்லாமலே ஓடி வா!

முந்தாநாள் பெளர்ணமி அன்னிக்கு நிலாவைத் தான் என் கையிலே பிடிச்சேன்னு பாடிட்டே படம் எடுத்தேன்.  முதல்லே வெளிச்சம் இருக்கிறச்சே ரெண்டு, மூணு எடுத்துட்டு, அதிலே கொஞ்சம் சுமாரானதைப் பகிர்ந்திருக்கேன்.


அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு.  அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன்.  அது கீழே.


Wednesday, May 9, 2012

காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி


கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Posted by Picasa

Monday, April 9, 2012

இங்கேயும் பாதை தெரியுது பாருங்க!

சான் அண்டானியோவின் ரிவர் வாக்கில் எடுத்த படம். வலப்பக்கம் படகு ஒன்று போய்க் கொண்டிருக்கையில் எடுத்தது.
இதுவும் சான் அண்டானியோவில் தான் ஸீ வேர்ல்டில் வாட்டர் ரைடில் எடுத்தது. வாட்டர் ரைடில் போகும்போது காமிராவெல்லாம் கொண்டு போக முடியாது. ஆகையால் வேறொருத்தர் ரைட் போகையில் எடுத்தது. பாதை தண்ணீரிலும் தெரியலாமே! :)))))
ஸீ வேர்ல்டுக்குள்ளாக நுழைந்து செல்லும் பாதை. சாதாரணமாய்க் கூட்டமாய்க் காணப்படும். அப்போ என்னமோ யாருமே இல்லையா? உடனே க்ளிக்கினேன். பையர் யாரும் இல்லை; உடனே எடுனு சொன்னார்.
இது படகில் இருந்து எடுத்தது. மேலே உள்ள பாலத்தைப் படகு கடக்கையில் எடுத்த படம். இதுவும் ரிவர் வாக்கில் எடுத்தது. நாங்க படகிலே சென்றபோது எடுத்த படம்.

பாதை தெரியுது பார்!

 
Posted by Picasa

இந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.
Posted by Picasa
போட்டிக்கெல்லாம் அனுப்பும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்க்க. சென்ற வருடம் செப்டம்பரில் மதுரை போகையில் ரயிலில் உட்கார்ந்த வண்ணம் எடுத்த படங்கள் இவை.

Thursday, March 29, 2012

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் நண்பர்

Posted by Picasa இவர் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன்லே இருக்கார். என் கணவர் சொல்றதைப் பார்த்தால் ரொம்பவே வயசானவர் போல இருக்கு. அந்த அதிகாலையில் குருக்கள் வந்து தன்னந்தனியாக அவருக்கு எல்லா சிசுருஷைகளும் செய்து பாலபிஷேஹமும் செய்துவிட்டு அலங்காரமும் செய்ததைப் பார்த்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.முழு அலங்காரத்தோடு கீழே பார்க்கலாம்.

Posted by Picasa

Sunday, March 25, 2012

பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!

ஹூஸ்டன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பூச்செடிகள் வசந்த கால ஆரம்பத்திலே பூத்திருந்த சில பூக்களுடன். இன்னும் முழுதாகக் குளிர் போய் இலைகளில் துளிர்களோ, அல்லது சின்னஞ்சிறு செடிகளில் பூக்களோ பூக்க ஆரம்பிக்கவில்லை.Posted by Picasa
எனினும் ஒரு சில செடிகள் அவசரக் குடுக்கையாகப் பூத்திருந்தன. அவற்றில் இரண்டு. சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்

இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்

கை கோர்த்திருக்கும் இருவரும்

என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??

Friday, March 23, 2012

ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ!

Posted by Picasa
மெம்பிஸில் இருந்து ஹூஸ்டன் திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் ரெஸ்ட் ஏரியாவில் கொஞ்ச நேரம் நிறுத்தினப்போ மேகங்கள் இம்மாதிரிக் காட்சி அளிக்கவே ஒரு க்ளிக். சுற்றுப்புறமே அசைவின்றி இருந்தது. மேகங்களும் நகரவில்லை. அதான் ஓடும் மேகங்களேனு பாடி அதை ஓட வைக்க முயன்றேன்.

Wednesday, February 15, 2012

என்ன இருந்தாலும் நம்ம நண்பர்!

நம்ம நண்பர் பாருங்க. கும்பேஸ்வரர் கோயிலில் எவ்வளவு சாதுவாகத் தென்னை ஓலை சாப்பிட்டுட்டு இருந்தார் தெரியுமா?

Sunday, February 5, 2012

வெள்ளிப்பனி மலையின் மீது ஏறலை!

&nbs சில நாட்கள் முன்னால் இங்கே பனி பொழிந்தது. வீட்டில் யாரும் இல்லை. நானும் ரங்க்ஸும் தான் இருந்தோம். வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் ஜவ்வரிசியை விடக் கொஞ்சம் பெரிசாகப் பஞ்சுப் பொதி பறக்கிறாப்போல் பனி பொழிந்து கொண்டிருந்தது. வெளியே போய்ப் படமெடுக்க ஆசை. ஆனால் உடலுக்கு ஒத்துக்காதுனு ரங்க்ஸ் குறுக்கே விழுந்து தடுத்துட்டார். வீட்டின் பின் பக்க ஜன்னல் வழியே எடுத்தேன். வெளிச்சம் குறுக்கே விழுந்து நிழல் தெரிந்தது. வெளியே போனால் தான் அது மறையும். சரி, போனு விட்டுட்டேன்.
 
Posted by Picasa
ஆகவே இது தொழில் நுட்ப நிபுணர்கள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு பார்க்கவேண்டும்; அல்லது தவிர்த்துவிடுங்கள்.

Monday, January 2, 2012

கிறிஸ்துமஸ் முடிஞ்சால் என்ன? அலங்காரம் பாருங்க!

கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் சில.
இங்கே நடைபெறும் கண்காட்சிகள் கிறிஸ்துமஸ் சமயத்தில் அதை ஒட்டியே அலங்காரங்கள் செய்யப்பட்டுக்காணப்படும்.
பல இடங்களிலும் கிறிஸ்துமஸ் மரம் இப்படி அலங்கரிக்கப்பட்டுப் பரிசுப் பொருட்களுடன் காணப்படும். சில மரங்கள் மாதிரியாகவும் அலங்கரிக்கப்படும். அவை விற்பனைக்கு.