Saturday, April 11, 2009

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு!

மதுரையிலே கல்யாணம் முடிஞ்சு சாயங்காலமாய் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்வாமி வருவார். அது ரொம்ப விசேஷம் என்பதோடு, அதென்னமோ தெரியலை, யானை என்றாலே அழகர் யானை என்றே பாடுவாங்க ம்துரையிலே. சின்னக் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டும்போது கால்களில் உட்கார வைத்துக் குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவாங்க, ஆனை ஆட்டம் என்றே அதுக்குப் பெயர். பாட்டோ இப்படி வரும்.

ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
கொம்பானை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம்
பார்க்க வாங்கோ!" என்று பாட்டுப் பாடிக் கொண்டே ஆனை ஆட்டுவாங்க குழந்தைகளுக்கு. இந்த ஸ்வாமி மலை கோயில் ஆனைக்குட்டிக்கும் கொம்பு முளைச்சிருக்கிறதைப் பார்த்ததும் அதான் நினைவு வந்தது!

2 comments:

  1. ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  2. என்ன ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்???? ஆனை நல்லா இல்லை?

    ReplyDelete