Sunday, March 25, 2012

பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!

ஹூஸ்டன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பூச்செடிகள் வசந்த கால ஆரம்பத்திலே பூத்திருந்த சில பூக்களுடன். இன்னும் முழுதாகக் குளிர் போய் இலைகளில் துளிர்களோ, அல்லது சின்னஞ்சிறு செடிகளில் பூக்களோ பூக்க ஆரம்பிக்கவில்லை.



Posted by Picasa
எனினும் ஒரு சில செடிகள் அவசரக் குடுக்கையாகப் பூத்திருந்தன. அவற்றில் இரண்டு. சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்

இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்

கை கோர்த்திருக்கும் இருவரும்

என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??

4 comments:

  1. அழகிய பூக்கள் நானும் பறித்திட்டேன்.

    சிறுவயதில் இதே விளையாட்டுத்தான் ஒரு குடம் தண்ணீர்ஊற்றி ஒரு பூ பூத்தது எனத்தொடங்கி பத்துக்குடம் வரும் வரை பாடிப்பிடித்து விளையாடி இருக்கின்றோம்.

    இங்கு இப்பொழுது இருப்பதாகத்தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்த விளையாட்டும் விளையாடி இருக்கோம் மாதேவி. அது எண்ணிக்கை தெரியச் சொல்லிக் கொடுப்பாங்க.

      Delete
  2. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி இந்த விளையாட்டு நாங்களும் விளையாடியிருக்கிறோம். இதன் விதிகள் சில மறந்து போய்விட்டன. இதுபோன்ற பழங்காலத்து விளையாட்டு முறைகளை அதன் விதிமுறைகளோடு வெளியிட்டீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும். அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும் கீதா அம்மா.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன் அருணா கோபி! நன்றி.

      Delete