Sunday, July 12, 2009

நந்தி மறைக்குது!

எவ்வளவு பெரிய நந்தி??? நல்லா எடுத்திருக்கேனா?? அப்புறம் தன்னோட போஸ் சரியாவே வரலைனு நந்தி சொல்லும்! படம் எடுக்கிறதுக்குனு படிச்சுட்டு எடுக்கணும்! உள்ளே பிரகதீஸ்வரரை எடுக்க முடியாது, இப்போ. ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னாலே இந்தக் கோயிலில் உள்ளெ போய்ப் பார்த்துட்டு வரதுக்கே பயம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ இருக்கும். இப்போ என்னன்னா, ஒரே கூட்டம்! கூட்டம்!
தஞ்சாவூர்க் கோயிலில் உள்ளே நுழையும் முன்னர் உள்ள நந்தி மண்டபத்தின் முகப்பு இது. கிட்ட வைச்சு எடுத்தும், சரியா விழலை.

3 comments:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  2. இல்லை சரியா எடுக்கலை. இந்த மாதிரி வெளிஉயே வெளிச்சம் அதுகமாயும் உள்ளே குறைவாயும் இருக்கிறப்ப எடுக்கிறது ரொம்ப கஷ்டம். மானுவலா நந்திக்கு மட்டும் சரியா அபெர்சர் செட் பண்ணிஉ எடுத்து ஒரே வெளிச்சமா வர மத்ததை வெட்டினாலும் முழுமையா நல்லா வராது. ஒரே வழி மாலை வெயில் குறைஞ்சு எல்லா இடத்திலும் ஒரே மாதிரி வெளிச்சம் இருக்கிறப்ப எடுக்கணூம். இல்லை மேக மூட்டம் அதிகமா போய் ஈவனா லைட் இருக்கிறப்ப எடுக்கணும்.

    ReplyDelete
  3. @திவா,
    சரி சார்! அடுத்த பாடம் சொல்லுங்க! :D

    ReplyDelete