மே மாதம் பதினேழாம் தேதியன்று எதிர்பாராமல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைப் பார்க்கணும்னு நம்ம ரங்க்ஸுக்கு ஆசை வர, சரினு ஒரு வண்டி ஏற்பாடு செய்துண்டு மத்தியானமா நாலு மணிக்கு மேல் கிளம்பிப் போனோம். உள்ளே மூலவரைப் பார்த்தாச்சு. ஆனால் அவர் பார்க்க விரும்பினது பார்த்தசாரதியை. அவர் ஜம்முனு உற்சவத்துக்குக் கிளம்பிட்டார். முன்னாடி மண்டபத்தில் இருப்பார்னு சொன்னாங்கனு அங்கே போனால் வீதிவலம் கிளம்பிட்டார்.
ஓட்டமாய் ஓடிப் போய்ப் பிடிச்சோம் அவரை. இந்த இரண்டு வெள்ளைக்குடைகளும் திருவல்லிக்கேணி கோயிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வாண்டுப் பயல்கள் தங்கள் சேமிப்பில் இருந்து பெருமாளுக்காகச் செய்து கொடுத்தது. மொத்தம் நாலு குடைகள் பண்ணிக் கொடுத்திருக்காங்க பசங்க, அன்னிக்கு உற்சவத்தில் இரண்டு குடைகள் மட்டுமே எடுத்துட்டு வந்தாங்க. பசங்க இன்னும் பெரிய பெரிய திட்டங்களெல்லாம் அவங்க சேமிப்பிலிருந்து செய்யறதுக்கு வச்சிருக்காங்க. படம் எடுக்கப் போனால் கிட்டே போய் எடுக்க முடியலை. சரினு இந்த மட்டும் தள்ளி நின்னாவது எடுக்க விட்டாங்களேனு எடுத்தாச்சு. கோபுரம், முன் மண்டபம் எல்லாமும் எடுத்திருக்கு. ஆனால் அந்தப் படங்களைக் காணோமே?? எங்கே போச்சு?? ம்ம்ம்ம்ம்?? தேடணும். இந்த ஓ.எஸ். மாத்தினதிலே எது எங்கே இருக்குனு ஒண்ணுமே புரியலை. everything is upside down! :P
Wednesday, June 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
everything is upside down! :P
ReplyDeleteஇல்லியே நேராத்தான் தெரியறார். :P
@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :D
ReplyDeleteஎங்க கிடைக்கும் இந்தக் குடை எல்லாம்? இல்ல கையாலயே பண்ணிணாளா!!!
ReplyDeleteJayashree has left a new comment on your post "பார்த்த சாரதி, உன்னைப் பார்த்த சாரதி!":
ReplyDeleteஎங்க கிடைக்கும் இந்தக் குடை எல்லாம்? இல்ல கையாலயே பண்ணிணாளா!!!
குடை செய்யறதுக்குன்னே ஒரு குடும்பம் இருக்கு ஜெயஸ்ரீ, அவங்க கிட்டே இவங்களோட சேமிப்பைக் கொடுத்துப் பண்ணி வாங்கிப்பெருமாளுக்குக் கொடுத்திருக்காங்க. தினசரிகளிலே கூட வந்தது இந்தச் செய்தி. நாலு குடை எல்லாம் அந்த ஏரியா குழந்தைகளின் சேமிப்பிலே இருந்து பண்ணினது.
ம்ம்ம்??? இதிலே ஜெயஸ்ரீ கமெண்ட் பப்ளிஷ் ஆகலையே?? ஏன்???
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு!
வாங்க ப்ரியா, நன்றி, பின்னூட்ட மழையா இருக்கே ரெண்டு நாளா! :))))
ReplyDeleteஹி ஹி ;உங்க பதிவு மழை தான் காரணம்!
ReplyDeleteஅப்புறம் நொறுக்கு தீனி நிறைய பார்க்கறது இன்னொரு காரணம் !!
THANGAMANI !
Note this above point !:)