Monday, December 27, 2010
ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை!
பகவான்
நவராத்திரியின் போது திடீர்ப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டும் போனோம். சுற்றுலாக் குழுவோடு சென்றதாலும் செல்லும்போதே மூன்று மணி ஆகிவிட்டதாலும் மற்ற ஆசிரமங்கள் போக முடியலை. கிரிவலப் பாதையில் முதலில் வந்தது ஸ்ரீரமணாஸ்ரமம். அவங்க அநுமதியோடு எடுத்த சில படங்கள் இங்கே ஒவ்வொன்றாய்க் காணலாம்.
தியான மண்டபம்.
பகவான் அண்ணாமலைக்கு வந்தபோது சிறுவனாக இருந்த நிலையில் எடுத்த ஓவியப் படம்.
தியானம் செய்யும் பெரிய கூடம்.
Subscribe to:
Post Comments (Atom)
இங்கே சென்றிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. அமைதியான இடம். ஆஸ்ரமம் எங்கும் மயில்கள் சர்வசாதாரணமாக நட(ன)மாடிக் கொண்டிருந்தன:)!
ReplyDeleteநல்ல நினைவுகளை தூண்டி விட்டீங்க!
ReplyDeleteகண்ணாடி போட்ட படங்களை ப்ளாஷ் இல்லாம எடுங்க. இல்லை வெளிச்சம் பத்தலைன்னா பக்கவாட்டிலேந்து எடுக்கணும். கண்ணாடியிலே பிரதிபலிப்பு இருக்கு பாருங்க!
வாங்க ரா.ல. எல்லாருமே திருவண்ணாமலைக்குப் போயிருக்காங்க. எங்களுக்கு இப்போத் தான் முடிஞ்சது. இன்னும் ஒண்ணுமே சரியாப் பார்க்கலைனு சொல்லணும். மயில்கள் இருந்தன. ஆனால் படம் எடுத்தால் பயந்து ஓடின. அதோடு சுற்றுலாக்குழுவினர் அவசரப் படுத்தினதும் சேர்ந்து கொண்டது. உங்களைப் போல் நான் காமிராவில் நிபுணியும் அல்ல! :))))))))) உங்களை மாதிரி எடுக்கணும்னு ஒரு ஆசை வச்சிருக்கேன். பார்ப்போம்.
ReplyDelete@திவா, யெஸ் டீச்சர்! இனி கவனமா இருக்கேன்! :D
ReplyDelete