பாயசம், வடை, முறுக்கு, உப்புச் சீடை, வெல்லச் சீடை, சீப்பி, வெண்ணைச் சீடை, கோலோடை, தட்டை, பால், தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் கண்ணனுக்குக் காட்டியாச்சு. இன்னமும் நாங்க எதுவும் சாப்பிடலை . ஓய்ஞ்சு போச்சு உடம்பும், மனமும். நாளைக்குச் சாப்பிட்டுக்கலாம். யாருக்கும் கொடுக்கவும் முடியாது இந்த வருஷம், வெளியே போக முடியாமல் சாலை ரொம்பவே மோசம். கால் வைச்சால் உள்ளே போகிறது. செருப்புப் போடாமல் போக முடியாது ரெண்டு பேருக்குமே! இந்த வருஷம் கண்ணன் இஷ்டம் இப்படி போலும்!
Sunday, August 21, 2011
ஏழை கண்ணீரைத் துடைக்கக் கண்ணன் வந்தான்!
பாயசம், வடை, முறுக்கு, உப்புச் சீடை, வெல்லச் சீடை, சீப்பி, வெண்ணைச் சீடை, கோலோடை, தட்டை, பால், தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் கண்ணனுக்குக் காட்டியாச்சு. இன்னமும் நாங்க எதுவும் சாப்பிடலை . ஓய்ஞ்சு போச்சு உடம்பும், மனமும். நாளைக்குச் சாப்பிட்டுக்கலாம். யாருக்கும் கொடுக்கவும் முடியாது இந்த வருஷம், வெளியே போக முடியாமல் சாலை ரொம்பவே மோசம். கால் வைச்சால் உள்ளே போகிறது. செருப்புப் போடாமல் போக முடியாது ரெண்டு பேருக்குமே! இந்த வருஷம் கண்ணன் இஷ்டம் இப்படி போலும்!
Thursday, August 18, 2011
நண்டு வருது, நண்டு வருது!
நேத்திக்கு எல்லாம் ஒரே மழை கொட்டோ கொட்டுனு கொட்டிச்சா! ராத்திரிப் பூரா மழை. காலம்பர எழுந்து வாசல் தெளிக்கமுடியலை. வானமே தெளிச்சுட்டு இருந்தது. சரினு கொஞ்சம் நின்னதும் கோலம் போடறச்சே கூடத் தெரியலை. அதுக்கப்புறமாப் பால் வாங்கப் போனா, ஹிஹிஹி, மாடிப்படிக்குக் கிட்டே ஒண்ணும், இன்னொண்ணு சைடிலே கிழக்குப் பக்கம் தண்ணீர் தேங்கி நிற்கும் அங்கேயுமாப் போயிட்டிருந்தது. உடனே காமிராவை எடுத்து வந்தேன். அதுக்குள்ளே ரங்க்ஸ் மாடியிலே இருந்து இப்போ எடுக்காதே வெளிச்சம் வரட்டும், இரு, இருன்னா. ஆனால் நான் எடுத்தேவிட்டேனே. மூணு எடுத்தேன். ஒண்ணிலே கொஞ்சம் பரவாயில்லை. மாடிப்படி நண்டு தான் கொஞ்சம் சரியா வரலை. அதனாலே அதைப் போடலை. போயிட்டு வானு அனுப்பி வைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
Saturday, August 13, 2011
மீன் கொத்தியைப் பிடிச்சேனே!
புதுசா விருந்தாளி வந்திருக்கார்னு ஒரு வாரம் முன்னாடியே தெரிஞ்சது. புது ஆள்னா உள்ளே விடமாட்டாங்க போல! :D ஒரே கூச்சல், குழப்பம். என்னனு பார்க்கப் போனால் எல்லாம் கப், சிப் காராவடை, காலணாவுக்கு ஓசி வடைனு அமைதி! அதிலும் இந்தத் தேன்சிட்டுங்க இருக்கே, ஜன்னல் வழியாப் பார்த்தால் இத்தனூண்டு இருந்துண்டு ஒரே கூச்சல், கூப்பாடு, அதட்டல்! மெல்ல மெல்லப் போனால் எப்படித் தான் தெரியுமோ~ எல்லாம் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்கே எல்லாமும் இப்போ மஞ்சக் கலரில் தான் வருதுங்க. பச்சைக் குருவியைக் கொஞ்ச நாளாக் காணோம்.
மேலே உள்ள விருந்தாளி நம்ம மீன் கொத்தனார் தான். இவர் ஒண்ணும் புதுசு இல்லை. நல்லாக் கிணத்துக்குள்ளே டைவ் அடிப்பார். இந்த வருஷம் தண்ணீர் சீக்கிரம் வந்துடுச்சா, ஏதானும் கிடைக்குமானு பார்க்க வந்திருக்கார் போல. இதுங்களோ சாகபட்சிணிங்க. நம்ம மீன் கொத்தனாரோ மீன் தான் சாப்பிடுவார். அப்புறமும் எதுக்குச் சண்டை! அதான் புரியலை! எல்லாமும் சேர்ந்து ஒத்துமையாப் பாடி ஆடலாம் இல்லை! அதை விட்டுட்டு,
எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்.
நான் வாழ யார் பாடுவார்,
என் பாடல் நான் பாடப்பலர் ஆடுவார்,
இனி என்னோடு யார் ஆடுவார்!
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்!
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
அப்படினு சிவாஜி ஸ்டைல்லே பாடிக்கும் போல! அவ்வளவு சத்தம்! :))))))))))
மேலே உள்ள படம் க்ராப்பிங் பண்ணறதுக்கு முன்னாடி. கீழே உள்ளது க்ராப்பிங் செய்தது. எப்போதும் போல் என் சாய்ஸ் ஒரிஜினலுக்குத் தான். என்ன கஷ்டம்னா, நான் படம் பிடிக்கப்போறது தெரிஞ்சு பின்னாடி வீட்டுக் கொடிக்குப் போய் உட்கார்ந்துடுச்சு, சரி, தொந்திரவு செய்ய வேண்டாம்னு அவங்க வீட்டுக் கொடியிலே உட்கார்ந்திருக்கிறச்சேயே எடுத்தேன். அதான் கொஞ்சம் பிடிக்கலை! :(
மூக்கோட ப்ரவுன் நிறம் எண்ணெய் போட்டாப்போல் பள பளா!
ஆகாச மாரியம்மன் கோயில்!
இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும்.
ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.
Thursday, August 11, 2011
அழகிய நதிமகள் இவள்!
இவள் சோகம் பெரிய சோகம். இப்போப் புதிய அரசு வந்ததும் நதியை, நீர்ப்பாசனக் கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் தூர் வாருவதைக் கேள்விப் பட்டேன். அது குறித்து எழுதியும் இருந்தேன். ஆனால் அதெல்லாம் காவிரியின் வடகரைப்பக்கம் மட்டும் போலிருக்கு. கும்பகோணத்திலிருந்து கூந்தலூர் வழியாகக் கருவிலி செல்கையில் அரசலாற்றுக்கரையோடு தான் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் எப்படி இருந்த அரசலாறு? இப்போப் பாருங்க! நதியில் நீரே நடுவில் கொஞ்சம் போல் தான் தெரியுது. இரண்டு பக்கமும் ஆகாயத் தாமரை, வேறே ஏதோ செடிகள்! அவலமான நிலையில் அரசலாறு. :((((((
Sunday, August 7, 2011
மாட்டிக்கிட்டது இதான்! :( கண்டு பிடிங்க ஆறு வித்தியாசங்கள்!
Subscribe to:
Posts (Atom)