Sunday, August 21, 2011

ஏழை கண்ணீரைத் துடைக்கக் கண்ணன் வந்தான்!

 கண்ணன் தெரியறாப்போல் எடுக்கணும்னு பார்த்தேன். உட்கார்ந்து தான் எடுக்கணும்போல! இன்னிக்கு முடியலை! :( இது போதும்னு விட்டுட்டேன்.
 இந்த வருஷம் கண்ணனுக்கு நோ திரட்டுப்பால், அப்பம் நோ. எல்லா பக்ஷணமும் கொஞ்சம் தான் பண்ணி இருக்கேன்.
 இந்த ரெண்டு படத்திலேயும் கொஞ்சம் கை நடுங்கிடுச்சு. காலையிலே தண்ணீர் இறைச்சது; அப்புறம் ரெஸ்டே எடுத்துக்கலையா! அதான் தலை சுத்தல்; சமாளிச்சுக் கொண்டேன்.
Posted by Picasa
பாயசம், வடை, முறுக்கு, உப்புச் சீடை, வெல்லச் சீடை, சீப்பி, வெண்ணைச் சீடை, கோலோடை, தட்டை, பால், தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் கண்ணனுக்குக் காட்டியாச்சு. இன்னமும் நாங்க எதுவும் சாப்பிடலை . ஓய்ஞ்சு போச்சு உடம்பும், மனமும். நாளைக்குச் சாப்பிட்டுக்கலாம். யாருக்கும் கொடுக்கவும் முடியாது இந்த வருஷம், வெளியே போக முடியாமல் சாலை ரொம்பவே மோசம். கால் வைச்சால் உள்ளே போகிறது. செருப்புப் போடாமல் போக முடியாது ரெண்டு பேருக்குமே! இந்த வருஷம் கண்ணன் இஷ்டம் இப்படி போலும்!

14 comments:

  1. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  2. எது?? பாயசம்?? வடை?? சீடை, முறுக்கு வகைகள்?? எது நல்லா இருந்தது? :))))))

    ReplyDelete
  3. யாருக்கும் கொடுக்கவும் முடியாது இந்த வருஷம், வெளியே போக முடியாமல் சாலை ரொம்பவே மோசம். கால் வைச்சால் உள்ளே போகிறது. செருப்புப் போடாமல் போக முடியாது ரெண்டு பேருக்குமே! சற்று வருத்தமான செய்தி.

    படங்களும், கிருஷ்ணர் பாதமும் அருமை

    ReplyDelete
  4. மம்ம்ம்ம்ம் மம்ம்ம்ம் மம்ம் மம் மம்... நன்னாக்கு!

    ReplyDelete
  5. வாங்க ராம்ஜி யாஹூ, தொடர் மழையால் எல்லாச் சாலைகளும் மோசமான நிலையில் இருக்கின்றன. எங்க வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் கால் புதைமண்ணில்போற மாதிரி உள்ளே போய், பாவம்! :(

    ReplyDelete
  6. கிருஷ்ணர் பாதம் குட்டிக் குட்டியாய் இருந்தால் தான் எனக்குப் பிடிக்கும். அதான் பிறந்த குழந்தைப் பாதம் அளவுக்கே வைப்பேன் எப்போவுமே! :))))))

    ReplyDelete
  7. திவா, என்ன சாப்பிட்டீங்க?? எது நல்லா இருக்கு??

    ReplyDelete
  8. வாங்க கோபி, தேடிப் பிடிச்சு வந்து ரசிச்சதுக்கு நன்னி ஹை.

    ReplyDelete
  9. திராச சார், ஒண்ணும் கிடையாது, போங்க! :P

    ReplyDelete
  10. What is koalodai and cheeppi? Wow!! Super woman !!

    ReplyDelete
  11. கோலோடைனால் முறுக்கு மாவையே கொஞ்சம் மோதிரம் மாதிரிப் பண்ணி எண்ணெயிலே போடறது. சீப்பி என்பது குழந்தை வாயில் வைத்துச் சப்பிச் சாப்பிடறாப்போல் நீளமாய் அந்தக் காலத்துப் பால் குச்சி போல் இருக்கும். :)))))

    ReplyDelete
  12. Super woman //

    நீங்க வேறே! :))))

    ReplyDelete