தோட்டத்திலே புதுசா ஒரு பறவைக் குரல் கேட்குது சில நாட்களாய். பறவை கண்ணிலே படலை. ஆனால் இன்னிக்கு ஒரே கூச்சல், குழப்பம். போதாததுக்கு இந்த அணில் வேறே வெடுக், வெடுக், வெடுக் னு ஒரே திட்டு எல்லாரையும். என்னமோ ஆயிருக்குனு புரிஞ்சது. சமையல் பண்ணிட்டு இருந்தாலும் மனசு என்னமோ அங்கேதான். சரினு அடுப்பிலே உள்ளவற்றைச் சின்னதாய்த் தீயை வைத்துச் சமைக்க விட்டு விட்டு ஓடிப் போய்க் காமிராவை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குப் போனேன். என்ன ஆச்சரியம்! தேன் சிட்டுக் கூட்டம், ஆஹா வகையா மாட்டிண்டதுனு மெல்ல மெல்ல அதை ஜூம் பண்ணி எடுக்கலாம்கறதுக்குள்ளே ஒரு குருவி நான் வரதைப் பார்த்துவிட்டு ஜூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்னு பறக்க மொத்தமும் பறந்துடுச்சுங்க. ஏமாற்றம்! :( இத்தனைக்கும் அசையாமல் இருந்தார் நம்ம தும்பியார். சந்தனமுல்லைச் செடியில் தேனைக் குடித்துக்கொண்டு மயங்கி விட்டார் போல. மேலே உள்ள படமும், கீழே உள்ள படமும் சில நொடி இடைவெளியில் எடுத்தது. இப்போக் கண்டு பிடிங்க ஆறு வித்தியாசங்களை.
Sunday, August 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
hihihii!நான் இதுக்கெல்லாம் எவ்வளோ நாள் கஷ்டப்பட்டு இருப்பேன்!
ReplyDeleteஎன்ஜாய்!
gர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னிக்கானும் கையிலே மாட்டாமலா போகுது! :P
ReplyDelete