Friday, September 9, 2011
உதிக்கின்ற செங்கதிரும், உச்சித் திலகமும்!
நேற்று வைகையில் மதுரையிலிருந்து திரும்புகையில் சூரிய உதயம் ஆகிக்கொண்டு இருந்தது. சுற்றிலும் சிவப்புக்கோளம் நெருப்பு எரிவது போல் தெரிய நட்டநடுவே வெள்ளைநிறச் சூரியன். நாற்புறமும் பரவிய கிரணங்களும் பார்க்க அழகோ அழகு. ஆனால் ஏசிக்காகப் போட்டிருந்த கண்ணாடியினால் படம் எடுத்தபோது அந்தச் சிவந்த நிறம் சரியாக வரவில்லை. கொஞ்சம் இல்லை; நிறையவே ஏமாற்றம். மதுரை வருகையில் பயணச் சீட்டுக்கிடைக்காமையால் இரண்டாம் வகுப்பிலே வந்தாப்போல் இப்போவும் வந்திருக்கலாமோ என எண்ண வைத்தது இந்தப் படங்கள்! கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கலாம். முயலவே இல்லை. முயன்று பார்க்கிறேன். அதுவரைக்கும் பிடிச்சதோ, பிடிக்கலையோ இதை ரசிங்க. இன்னொரு கோணத்தில் முயன்றால் ரயில் கொஞ்சம் வளைந்து செல்ல ஆரம்பித்திருந்தது. ஆகையால் உச்சியில் குமிழி போல் வந்துவிட்டது. அமெச்சூர் கூட இல்லைங்க நான்; ஆகவே தவறுகளுக்கு மன்னிக்கவும்.:(
Subscribe to:
Post Comments (Atom)
முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உச்சித் திலகம் பிரகாசம்.
ReplyDeleteநன்றி ரத்னவேல்,
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி.
ஏசி கம்பார்ட்மெண்டிலிருந்தே இப்படி எடுக்கமுடிகிறதென்றால் வெளியிலிருந்து எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும். ( கதவைத்திறந்து வழியிலிருந்து எடுத்திருக்கலாமோ?) எனினும் நல்ல முயற்சி
ReplyDeleteவியபதி, மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி.
ReplyDelete