வைரவன் பட்டிக்கு நாங்க போனப்போ அப்போத் தான் ரேக்ளா பந்தயம் நடந்து முடிஞ்சிருந்திருக்கு. முன்னாலேயே தெரியாமப் போச்சேனு வருத்தமா இருந்தது. ரொம்ப வருஷம் ஆச்சு ரேக்ளா பந்தயம் பார்த்தே! :( சரி போனாப் போகுதுனு மாடுகளையும் அங்கே வைரவருக்காகக் காத்திருந்த ரதத்தையும் படம் எடுத்துக் கொண்டேன். கோயிலுக்குள்ளே எடுக்கக் கூடாது. மேலே உள்ள மாடுகளை அதன் சொந்தக்காரர் அர்ச்சகரிடம் விபூதி, குங்குமம் போடுவதற்காக அழைத்து வந்துவிட்டுத் திரும்பக் கூட்டிச் செல்கிறார்.
வைரவருக்குக் காத்திருக்கும் ரதம்.
ரேக்ளாவில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகளும், ரேக்ளா வண்டியும். எல்லாத்தையும் மினி லாரியில் ஏத்திட்டாங்க. இதுவும் ஏத்தப்போகும் சமயம் அவசரமாக எடுத்தேன். :)
மாடுகளின் சொந்தக்காரர்கள் பெயர் அறிவிக்கப் பட்டதும் மாடுகளோடு போய்ப் பரிசு வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர். இன்னொருத்தர் பரிசு வாங்கச் செல்கிறார்.
" சாட்டைக் கையில் கொண்டு வாங்கக் கண்டு காளை ரெண்டு... ஓடுது பாரு... தாவுது பாரு... பறக்குது பாரு...முட்டுது பாரு... ஓடுரா ராஜா ஓட்றா ராஜா.. ஓட்றா ராஜா... ரா...ஜா....ஹோய்..."
ReplyDeleteரேக்ளா பார்த்து எத்தனை நாளாச்சு? ரேக்ளா என்றதும் நினைவுக்கு வந்த பாடல்!
வாங்க ஶ்ரீராம், எனக்கும் ரேக்ளா பார்த்து வருடங்கள் ஆகின்றன. முன்னெல்லாம் மதுரை மாசி வீதிகளில் பொங்கல் கழிச்சு நடக்கும். அப்ப்ப்ப்போப் பார்த்தது!
Deleteபிள்ளையார்பட்டி கோயில் வாயிலில் வைத்து பரிசுகள் வழங்கியுள்ளனர். பிள்ளையார் தரிசனம் முடித்து, மாண்டுவண்டிப் பந்தையத்தில் வென்ற காளைகளுக்குப் பரிசுகள் வழங்கியதையும் பார்த்துள்ளீர்கள். கொடுத்துவைத்தவர்கள்.
ReplyDeleteஇல்லை ஐயா, வைரவன் பட்டி கோயில் வாசலில் தான் பரிசுகள் வழங்கும் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தனர். மாடுகள் அங்கே தான் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. அதன் பின்னர் நாங்கள் பிள்ளையார் பட்டி போனப்போ அங்கே ஹோமங்கள் தான் நடந்து கொண்டிருந்தன. பிள்ளையாரைப்பார்க்கக் கூட்டம் அதிகமாக இருந்தது. :)))) அங்கே இந்த மாடுகள் அதன் சொந்தக்காரர்கள் யாருமே வரவில்லை. அன்னதானமும் வைரவன் பட்டியில் நடந்து கொண்டிருந்தது. :))))
Deleteநீங்கள் எல்லோரும் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று என்கிறீர்கள் நான் ஒருதடவை கூட நேரில் பார்த்ததில்லை.
ReplyDeleteபடங்களை பார்த்து மகிழ்கின்றேன்.
வாங்க மாதேவி, ஒரு தரம் பார்த்தால் பிடிச்சுப் போகும்.
DeleteI am staying in Baroda Gujarat since long. I am working in a nationalized bank here and my residence is near Hari Nagar, Gotri Road. This has reference to your comment column of Munram Suzhi.
ReplyDeleteநன்றி மோகன் பரோடா. பெயரில் இருந்தே தெரிஞ்சாலும் ஒருவேளை அங்கே இருந்ததால் அந்தப் பெயரோ என்ற சந்தேகம். தகவலுக்கு நன்றி.
Delete