Tuesday, May 26, 2009

மல்லிகைப் பூவா? இட்லியா???? பொன்வண்டின் சந்தேகம்!

மெளலி வந்தப்போ இட்லி கொடுத்தால் சாப்பிடலை. அதைத் தோட்டத்தில் மாமரத்தடியில் உள்ள கல்லில் வைக்கச் சொன்னேன். மறுநாள் பார்த்தால் ஒரு பொன்வண்டு அதைப் பூவோனு நினைச்சு தேன் கிடைக்குமானு பார்த்துட்டு இருந்தது. உடனே ஒரு க்ளிக் எடுக்கணும்னு நினைச்சால் கிட்டே போகமுடியலை. ஓடிப் போயிடுது. வேறே வழியில்லைனு தள்ளி இருந்து ஜூம் பண்ணினால் பொன்வண்டைத் தவிர மத்தது வருது. என்னத்தைச் செய்ய? உற்றுப் பாருங்கள். குப்பைத் தொட்டிக்கு அருகே ஒரு கல்லில் இரண்டு இட்லியும், கொஞ்சம் கறுப்புக் கலந்த நிறத்தோடு ஒரு பூச்சியும் தெரியும். வேறே வழி இல்லை. கிட்டேப் போனால் பறந்து போயிடுது.

9 comments:

  1. //வந்தப்போ இட்லி கொடுத்தால் சாப்பிடலை.//

    யாரு வந்தப்போ?

    அது சரி... தேன் கிடைச்சதா இல்லையா? கேட்டுச் சொல்லுங்க சீக்கிரம்! :)

    [ நீங்களும் இந்த பெட்டிக்கு மாறிட்டீங்களா? இதுல comment follow-up போட முடியறதில்லை :( ]

    ReplyDelete
  2. தலைவியின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    நல்ல விருந்து சாப்பாட்டை சாப்பிட்டு வந்ததால் 2 இட்லிக்கு மேல் சாப்பிட முடியலை.

    பெரியவர்கள் நிறம்பிய சத்சங்கத்தில் ஆ! என்று வாய் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அதிகமாகப் பரிமாறிய 2 இட்லியை மட்டுமே காக்கைக்கும், நாய்க்கும் மிகுந்த வருத்தத்துடன் இட்டேன்.

    அதிகமான அந்த 2 இட்லிகளைப் பொன்வண்டு ஏதோ பவித்ரமான உத்திஷ்டம் என்று வந்திருக்கிறது. அதைப் போய் தவறாக சித்தரிக்க முயலுகிறீர்கள்...தர்மமா?, நியாயமா?.. :)

    ReplyDelete
  3. வாங்க திவா, நீங்க தான் வேண்டாம்னுட்டீங்களே? :P:P:P:P:P

    ReplyDelete
  4. @கவிநயா, எல்லாரும் வந்தப்போதான். பொட்டியை மாத்திப் பெரிசாப் போட்டாச்சு, இப்போச் சரியா? follow-upம் கொடுக்கலாம், நான் இத்தனை வருஷமா ஃபாலோ அப்பே கொடுத்ததில்லையா? அதனால் அது தோணலை. இப்போத் தான் இரண்டு மாசமாக் கொடுக்கிறேன். நினைவு இருக்கிறப்போ! :D

    ReplyDelete
  5. தேன் இருந்துச்சுனு தான் சொன்னது பொன்வண்டு! :)))))))))))

    ReplyDelete
  6. @மெளலி, நான் தான் கண்டிக்கணும் வன்மையா! நறநறநறநறநற னு பல்லைக் கடிச்சதிலே பல்லெல்லாம் வலி! :P

    //அதைப் போய் தவறாக சித்தரிக்க முயலுகிறீர்கள்...தர்மமா?, நியாயமா?.. :)//

    தவறாய் எங்கே சித்திரிக்கிறேன். இட்லியை மல்லிகைப் பூனு நினைச்சுத் தேன் குடிக்க வந்ததுனு தான் சொன்னேன். உங்க வீட்டிலே இட்லி இப்படி இல்லைனா இப்படியா புகை விடறது? :))))))))))

    ReplyDelete
  7. தலைவி

    இந்த படத்துக்கு எம்புட்டு செலவு ஆச்சு??

    அதையும் சொல்லிடுங்க ;))

    ReplyDelete
  8. @கோபி, செலவா???/ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete