
தூர்தர்ஷன் பாரதியில் தியாகராஜர் பற்றிய வரலாறு ஒரு டாகுமெண்ட்ரி காட்டிட்டு வராங்க. அநேகமா முடிஞ்சிருக்கும்.அப்புறமாப் பார்க்க முடியலை! கடைசியாப் பார்த்தன்னிக்குப் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளும், அதிலே சாதிஞ்சனே பாட்டின் சரணத்தில் வரும் மாற்றம் பற்றியும் சொல்லிட்டிருந்தாங்க. தியாக ராஜர் பாடிய சில குறிப்பிட்ட பாடல்களையும், அது பாடப்பட்ட நேரங்களையும் நாட்டிய நாடகமாய்க் காட்டறாங்க. ஆடியது தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன் குழுவினர். கேட்கணுமா ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும். அப்போ ஒரு நாள் இந்த "சீதா கல்யாணமே வைபோகமே" பாடலுக்கான காட்சிகளை சீதா கல்யாணமாக் காட்டினப்போ ராமராகவும், சீதையாகவும் ஆடினவங்க ஆடின ஆட்டம் ரொம்ம்ம்ம்ம்ம்பவே நல்லா இருந்தது. அதில் இருந்து சில காட்சிகளை இங்கே பார்க்கிறீங்க. இது மாலை மாற்றும் காட்சி.

சீதை ராமருக்கு மாலை போடுகிறாள். அதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடறாங்க பாருங்க. வீடியோ காமிரா இருந்தால் வீடியோவா எடுத்துப் போட்டிருக்கலாமேனு தோணிச்சு. அவ்வளவு அழகு!

மறு ஒளிபரப்பாவும் மறுநாள் காலம்பர நாலு மணியிலே இருந்து போட்டாங்க. ஹிஹிஹி, நாலு மணிக்கானு கேட்கறீங்களா?? நாலு மணிக்குத் தான் எழுந்துடுவேனே. உடம்பு சரியில்லைனால் கூட எழுந்துடுவேன். ரொம்ப மோசமாப் போய் அதுக்காக எடுத்துக்கும் இந்த மருந்து, மாத்திரைகள் தாக்கத்தால் தான் இப்போ ஒரு வாரமா ஐந்தரை மணி ஆயிடுது! :(