Sunday, September 19, 2010

சீதா கல்யாணமே வைபோகமே!

தூர்தர்ஷன் பாரதியில் தியாகராஜர் பற்றிய வரலாறு ஒரு டாகுமெண்ட்ரி காட்டிட்டு வராங்க. அநேகமா முடிஞ்சிருக்கும்.அப்புறமாப் பார்க்க முடியலை! கடைசியாப் பார்த்தன்னிக்குப் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளும், அதிலே சாதிஞ்சனே பாட்டின் சரணத்தில் வரும் மாற்றம் பற்றியும் சொல்லிட்டிருந்தாங்க. தியாக ராஜர் பாடிய சில குறிப்பிட்ட பாடல்களையும், அது பாடப்பட்ட நேரங்களையும் நாட்டிய நாடகமாய்க் காட்டறாங்க. ஆடியது தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன் குழுவினர். கேட்கணுமா ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும். அப்போ ஒரு நாள் இந்த "சீதா கல்யாணமே வைபோகமே" பாடலுக்கான காட்சிகளை சீதா கல்யாணமாக் காட்டினப்போ ராமராகவும், சீதையாகவும் ஆடினவங்க ஆடின ஆட்டம் ரொம்ம்ம்ம்ம்ம்பவே நல்லா இருந்தது. அதில் இருந்து சில காட்சிகளை இங்கே பார்க்கிறீங்க. இது மாலை மாற்றும் காட்சி.
சீதை ராமருக்கு மாலை போடுகிறாள். அதுக்கு முன்னாடி ஒரு ஆட்டம் ஆடறாங்க பாருங்க. வீடியோ காமிரா இருந்தால் வீடியோவா எடுத்துப் போட்டிருக்கலாமேனு தோணிச்சு. அவ்வளவு அழகு!
மறு ஒளிபரப்பாவும் மறுநாள் காலம்பர நாலு மணியிலே இருந்து போட்டாங்க. ஹிஹிஹி, நாலு மணிக்கானு கேட்கறீங்களா?? நாலு மணிக்குத் தான் எழுந்துடுவேனே. உடம்பு சரியில்லைனால் கூட எழுந்துடுவேன். ரொம்ப மோசமாப் போய் அதுக்காக எடுத்துக்கும் இந்த மருந்து, மாத்திரைகள் தாக்கத்தால் தான் இப்போ ஒரு வாரமா ஐந்தரை மணி ஆயிடுது! :(

7 comments:

 1. மாமி - இதெல்லாம் போடறாங்களா தூர்தர்சன்ல... நல்ல ப்ரோக்ராம்ஸ் எல்லாம் டிவில இல்லாமையே போய்டுச்சுன்னு நெனச்சேன்... நல்ல பகிர்வு...

  //நாலு மணிக்குத் தான் எழுந்துடுவேனே//
  ஆஹா... எனக்கு அப்போ தான் ரெண்டாம் ஜாமம் தொடங்கும்... ஹா ஹா ஹா... நெஜமாவே எப்படி மாமி அவ்ளோ நேரத்துல? ரெம்ப கஷ்டம்... எனக்கு சான்சே இல்ல... முன்னயெல்லாம் என் கசின்ஸ் கோபத்துல எனக்கு எதாச்சும் சாபம் விடறதுன்னா "உனக்கு காலங்காத்தால மூணு மணி முகூர்த்தத்துல தான் கல்யாணம் பாரு" னு சொல்வாங்க.. அவ்ளோ தூக்க ப்ரியை நான்...

  ReplyDelete
 2. இந்த ப்ளாக் இப்போ தான் பார்த்தேன் ! நல்ல பகிர்வு

  படங்கள் எல்லாம் அழகு

  தங்கம் ! நானும் வந்துட்டேன் !
  உங்க மாமி எத்தனை ப்ளாக் வைத்து இருக்காங்க !
  எப்படி இவ்வளோ மேட்டர் எளுதறாங்கன்னு ரொம்ப ஆட்சிரியமா இருக்குப்பா
  (எழுதறதுக்கு தனியா ஆட்கள் வைத்து இருக்கங்களான்னு நான் கேட்கலே !
  என் வாய் தான் கேட்குது கீதாம்மா !)
  பாருங்க தங்கம் !
  நமது பாசத்திற்கு உரிய எதிரிகள் சொல்ற மாதிரி எல்லாம் நடக்காது!
  என் கல்யாணத்திற்கு கூட நிறைய மழை வரும்ன்னு சொன்னாங்க
  மழை வரலை ;அன்னைக்கு தான் வெயில் அதிகமா இருந்தது :)

  ReplyDelete
 3. (எழுதறதுக்கு தனியா ஆட்கள் வைத்து இருக்கங்களான்னு நான் கேட்கலே !
  என் வாய் தான் கேட்குது கீதாம்மா !)//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வீட்டிலே இருக்கிறது நானும், ரங்க்ஸும் மட்டும், ரங்க்ஸ் கணினி கிட்டே வந்தால் மாஜிக் ஜாக் மூலமாப்பேசறதுக்குத் தான்! மத்தபடி என் குழந்தைங்க ரெண்டு பேருக்கும் (இங்கே இல்லை, யு.எஸ்ஸிலே இருக்காங்க :D) தமிழ் தெரியாது, தமிலோ, தமிளோ கூடத் தெரியாது. சோ, அனைத்தும் என் சொந்த தனிப்பட்ட சொத்து. யாருக்கு எழுதி வைக்கிறதுனு தான் யோசிச்சிட்டு இருக்கேன்! :))))))))))))))

  ReplyDelete
 4. //தமிழ் தெரியாது, தமிலோ, தமிளோ கூடத் தெரியாது. சோ, அனைத்தும் என் சொந்த தனிப்பட்ட சொத்து. யாருக்கு எழுதி வைக்கிறதுனு தான் யோசிச்சிட்டு இருக்கேன்! :))))))))))))))//

  அம்மாடி ! பெரிய சந்தேகம் தீர்ந்தது!!
  ஹ ஹா உங்கள் நகைசுவையை படித்து சிரித்து விட்டேன் .,
  விடுங்க கீதாம்மா;அரசாங்கத்துக்கே கொடுத்துடுங்க
  அவங்க புத்தகமா போட்டு அதை நாட்டு உடமையாக்கிடட்டும் !!
  உங்க சம்மதம் தான் முக்கியம் !!

  ReplyDelete
 5. இருங்க ப்ரியா, படங்களை அப்லோட் பண்ணவே இல்லை. :(

  ReplyDelete
 6. ஹய்யா! எங்க டீச்சர் வந்துட்டாங்க வந்துட்டாங்க
  Take your own time Miss (Guruji)

  ReplyDelete