Tuesday, February 8, 2011

உப்புமா சாப்பிடலாம், வாங்க!

வெண்கல உருளியில் தயாராகிக் கொண்டிருந்த அரிசி உப்புமா. இதன் ஜோடி கொத்சு கீழே.

19 comments:

  1. வெண்கலப் பானை உருளி எல்லாம் நான் அலங்காரப் பொருட்களாக ஆக்கிவிட்டுள்ளேன்:)!

    உப்புமா அருமை. கொத்சு நல்ல சுவை.

    நன்றி:)!

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. வெண்கலப்பானை, உருளி எல்லாத்திலேயும் இன்னமும் சமைக்கிறேன். இப்போ வாஸ்துவுக்காகத் தண்ணீர் நிரப்பிப் பூக்கள் போட்டு அலங்கரிக்கும் குட்டை உருளியில் ஐயப்பன் பூஜைக்கு அரவணைப் பாயாசம் செய்வேன். தூக்க முடியாது. செய்து வைச்சுட்டா தூக்கறது மத்தவங்க பாடு! :)))))

    ReplyDelete
  3. மறந்துட்டேனே, உப்புமாவும், கொத்சுவும் சாப்பிட நீங்க வருவீங்களோனு நினைச்சேன். வர முடியலை போல! என்றாவது ஓர் நாள் சந்திப்போம். :)

    ReplyDelete
  4. ஓ அந்த கேரியரில் இருந்தது இவைதானா:)?

    சந்திப்போம் ஒரு நாள் நிச்சயமா:)!

    //தண்ணீர் நிரப்பிப் பூக்கள் போட்டு அலங்கரிக்கும் குட்டை உருளியில்//

    நீரில் பூக்கள்தான் இங்கும். பானையை பளபள எனத் துலக்கி அதில் பூங்கொத்து இலைகளுடன்:))!

    ReplyDelete
  5. ஆமாம், ரா.ல. ஹாட் பேக்கில் உப்புமாவும், கொத்சுவும் சூடு ஆறாமல் இருக்க வைச்சு எடுத்துட்டுப் போனோம். :)))) பார்க்கலாம், நான் பெண்களூர் வரேனா, இல்லை நீங்க சென்னை வரீங்களானு!! :))) இப்போதைக்கு எனக்கு சான்ஸ் இல்லை!

    ReplyDelete
  6. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ரொம்ப காரம். எனக்கு வாணாம்!:P:P:P

    ReplyDelete
  7. வந்துட்டோமே!

    இப்போ எல்லாம் கொத்சு செய்யறது கொறைஞ்சு போய் சட்னி தான் ..

    ஆமா இந்த பதிவு சாப்பிட வாங்க ப்லோக்ளில் தானே வர வேண்டும் !

    சரி சரி பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  8. வெண்கலப் பானை உப்புமா சுவையாக இருக்கு.

    வெண்கலப் பானைப் பொங்கல் எல்லாம் இப்போ எங்கே மறந்தாகிவிட்டது.

    ReplyDelete
  9. ஹ்ம்ம்...பெருமூச்சு தான் வேறென்ன... பசி நேரத்துல இந்த பக்கம் வர மாட்டேன் இனிமே...:)))

    ReplyDelete
  10. திவா, பார்க்கறச்சேயே காரமா?? :P அதெல்லாம் காரம் கிடையாது, தேங்காய் நிறையச் சேர்ப்பேன். தைரியமாச் சாப்பிடலாம்! :)))

    ReplyDelete
  11. ப்ரியா, எங்க வீட்டிலே முந்தாநாள் ஞாயிறன்று கூடகொத்சு தான். கத்தரிக்காய் சுட்டு கொத்சு தான் சரியான காம்பினேஷன். பல காரணங்களுக்காகவும் கத்தரிக்காய்போட்ட சாம்பாரைக் கூட கத்தரிக்காய் இல்லாமல் சாப்பிடுவது கூடக் கூடாது என 144 தடை உத்தரவு மருத்துவர்களால். ம்ம்ம்ம்ம் கத்தரிக்காய் ரொம்பப் பிடிச்சது! அதைப் பார்த்து ஏங்கிடுவேனோனு வாங்கப் போறதே இல்லைனு சொல்லிட்டார்.

    பரவாயில்லைனு அவருக்கு மட்டும் பண்ணறேன்னு சொல்லி இருக்கேன். அன்னிக்குக் கீரை அல்லது சாலட் பண்ணிப்பேன்! :)))))))

    கத்தரிக்காய் டேஸ்ட் டேஸ்ட் தான்! :)))))))))

    ReplyDelete
  12. வாங்க மாதேவி, இங்கே வந்தால் வெண்கலப்பானைப் பொங்கல், கல்சட்டி வத்தல் குழம்பு, ஈயச் செம்புரசம், இட்டிலிப் பானை இட்டிலி, இரும்பு தோசைக்கல்லில் தோசைனு சாப்பிடலாம். நான் ஸ்டிக் இருக்கு சட்டியும் இருக்கு, தோசை வார்க்கவும் வச்சிருக்கேன். ஆனால் பயன்படுத்துவது விருந்தாளிங்க வரும்போதுஅவங்க சமைச்சால் மட்டுமே. அப்போக் கூட நான் சமைச்சேன் என்றால் பாரம்பரியப் பாத்திரங்கள் தான்.

    ReplyDelete
  13. ஏடிஎம், முதல்லே இட்லியை ஒழுங்காச் செய்யுங்க. அப்புறமா உப்புமாவுக்கு வரலாம்! :P:P:P:P

    ReplyDelete
  14. இன்னிக்கு எங்க வீட்டில் கூட கத்தரிக்காய் சுட்டு கொத்சு தான்

    எல்லாம் உங்க பதிவை படிச்சதோட விளைவு :) :)

    ReplyDelete
  15. அட?? சுடச் சுட கொத்சு?? தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  16. //ஏடிஎம், முதல்லே இட்லியை ஒழுங்காச் செய்யுங்க. அப்புறமா உப்புமாவுக்கு வரலாம்! :P:P:P:ப//

    என்ன இட்லியை ஒழுங்காச் செய்யறதா ???????????

    நாங்க என்னைக்கு எந்த பொருளை ஒழுங்கா செய்து இருக்கோம் ஹி ஹீ

    அனேகமா அப்பாவின் பதில் இப்படி தான் இருக்கும்

    ஏன் மாமி நாங்க என்ன வைச்சுகிட்டா வஞ்சனை பண்ணறோம் எல்லாம் எங்க ரங்கஸ்வோட அஜீத் லெட்டர் .,ஹ ஹா ஹா

    அப்படி தானே அப்பாவி !

    ReplyDelete
  17. அரிசி உப்புமா!!
    வெள்ளை வெளேர்னு பெரிய பாட்டி உப்மா
    சிலசமயம் தண்ணி கூடமாட ஆனா கொழக்கட்டையாகும் உப்புமா!!கொத்ஸு !! ம்... பண்ணிப்பாக்கிறேன் . இப்ப நிலமையில் மூடில்லை!

    ReplyDelete
  18. உப்புமா கொழுக்கட்டை புழுங்கலரிசியை அரைச்சுத் தனியாத் தான் பண்ணுவா எங்க அம்மாவெல்லாம். உப்புமா அடைனு கூட ஒண்ணு பண்ணுவா! இப்போல்லாம் எங்கே?? இது ஒருத்தரின் வேண்டுகோளின் படி பண்ணி எடுத்துண்டு போனேன். :))))))))) அரிசி உப்புமா அடிக்கடி பண்ணறதுண்டு. உருளியில் தான்! :D

    ReplyDelete
  19. நிலைமை சீராகக் கடவுளைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு ஒண்ணும் புரியலை ஜெயஸ்ரீ! :(((

    ReplyDelete