Tuesday, May 3, 2011

ஆனைக்கு ஒரு coloumn பூனைக்கு ஒரு coloumn

 
Posted by Picasa
முன்னாடி நாய் கடிச்சுக் குட்டிகளோட செத்துப் போச்சே, அதுக்கப்புறமா வந்திருக்கு இந்தச் செல்லக்குட்டி. இது குட்டி போடறதுக்கு முன்னாடி. குட்டி போட்டாச்சு இப்போ. எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்கு. பாவம், பிழைச்சுப் போகட்டும். இந்தப்பூனைக்குட்டிகள் பற்றிய ஒரு கதை வேறே படிச்சேனா, மனசே சரியில்லை, குட்டி எல்லாம் நல்லபடியா இருக்கணுமேனு கவலை. :((( கடுவன் பூனை வந்து குட்டிகளைக் கொன்னுடுமாமே?? நிஜமா??? ஒரு கதையிலே படிச்சேன். இதோட குட்டிகள் கண்ணிலே படலை. வேறே எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்குப் போல. நல்லவேளை, கடுவன் பூனையும் இப்போக் கொஞ்ச நாட்களா வரலை.

14 comments:

  1. தாயும் சேய்களும் நலமே வாழ்க.

    பதிவுக்கு ஒரு தலைப்பு கொடுங்க..
    ‘செல்லக்குட்டி’:)!

    ReplyDelete
  2. இந்த தலைப்பு நல்லா இருக்கே:)! ஓகே!

    ReplyDelete
  3. குட்டிப்பூனை ஆணா இருந்தா நிச்சயம் கடுவன் வந்து தேடி வேட்டையாடி கொண்டு போயிடும். அதுக்கு காம்பெடிஷன் இருக்கக்கூடாது.

    ReplyDelete
  4. வாங்க ரா.ல. இணையம் படுத்திட்டு இருந்தது, பிடிவாதமாத் தலைப்பை விட்டுட்டுத் தான் பதிவு வெளிவருவேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்தது,, இந்தத் தலைப்போடத் தான் கொடுத்தேன், அது என்னமோ, தலைப்பே இல்லாமல் தான் வந்தது, ரொம்பக் கஷ்டப்பட்டுத் தலைப்பைப் பிடிச்சேன். :))))))

    ReplyDelete
  5. ராம்ஜி யாஹூ, இந்தத் தலைப்பை ஏற்கெனவே கொடுத்திருந்தேன், ப்ளாகர் ஒத்துக்கலை, ஒத்துக்க வைக்கிறதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுச்சு! :P

    ReplyDelete
  6. @திவா, தகவலுக்கு நன்றி. :( வருத்தமா இருக்கு, என்னதான் உண்மையானாலும்! :((((

    ReplyDelete
  7. பூனையார் எப்போதுமே கொஞ்சம் சொகுசுப் பேர்வழிதான், இல்லை?

    ReplyDelete
  8. நான் பார்த்த படம்தான்:). ஆனால் இது கவலையால் ‘தூங்கா’ப் பூனை!

    ReplyDelete
  9. எங்கள் ப்ளாகில் ஒரு தூங்கும் பூனை; இங்கு ஒரு 'தூங்கா'ப் பூனை!(ராமலக்ஷ்மி க்கு நன்றி)நீங்கள் கொடுத்த பெயரையே நானும் பயன்படுத்திக் கொண்டதற்கு!

    ReplyDelete
  10. வாங்க ஸ்ரீராம், உங்களை எல்லாம் வர வைக்க விளம்பரம் கொடுத்தது வீணாகலை. :))))) பூனையார் சொகுசு தான். ஆனால் இவர் இரையைக் குறி வைச்சுட்டு இருந்தப்போ எடுத்த படம். நல்லவேளையா அந்தக் குஞ்சுப் பறவையைப் பறக்க விட்டுட்டோம். பூனைக்கு வேறே ஏதானும் கிடைச்சிருக்கும். :)))))

    ReplyDelete
  11. வாங்க ரா.ல. இந்தப் பதிவுகளின் ஒரே ரசிகையான உங்களுக்கு எப்போதுமே என் சிறப்பு நன்றி உண்டு. :))))))

    ReplyDelete
  12. வாங்க ரஞ்சனி, உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சியை அளித்தது. நன்றி.

    ReplyDelete
  13. ஆஹா !! இது நம்ம ஏரியா .பத்திய சாப்பாடெல்லாம் கொடுத்தீங்கனு அங்கே துரை அண்ணா பக்கத்தில் பார்த்து வந்தேன் .எங்கம்மாவை தேடி ஒரு ஆஞ்சி வருவார் அம்மா கையால் சாப்பாடு தண்ணி சாப்பிட்டு போவாராம் .

    பாவந்தான்கா இதுங்களும் ஆனா சந்தோசம் என்னன்னா இவங்களுக்குன்னு இந்த மாதிரி உதவ நல்ல உள்ளங்களையும் சேர்த்து படைச்சிருக்கார் இறைவன் .

    ReplyDelete