Wednesday, May 11, 2011
தாமரை பூத்த தடாகமடி!
திருப்பனந்தாள் காசி மடத்தில் ஒரு அழகான தாமரைக் குளம் இருக்கிறது. தாமரைகள் அனைத்தும் வெண்தாமரைகள். செந்தாமரையும் வைச்சாங்களாம், அது என்னமோ சரியா வரலையாம். ஒவ்வொரு பூவும்(பூக்களும் என்றால் தப்பில்லை??) பெரிசு பெரிசாக சாதம் பிசைஞ்சு சாப்பிடலாம் போல! அங்கே நடுவே உள்ள மண்டபத்தில் ஜம்முனு நம்மாளு வெள்ளைவெளேர்னு பளிங்குக்கல்லில் உட்கார்ந்திருக்கிறார். அநுமதி கேட்டுட்டு இரண்டையும் க்ளிக்கினேன். மாயவரம் வேதபாடசாலையில் இருந்து ஒரு சின்னப் பையர், (நிஜம்மாவே சின்னவர் 20 வயசுக்குக் கீழே தான் இருக்கும்) மடத்திலேயே தங்கிக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு அங்கே இருக்கும் சிவன் கோயிலுக்கும், இந்தப் பிள்ளையாருக்கும் தினப்படி கைங்கரியம் செய்து வருகிறார். வாரம் ஒரு முறை மாயவரம் போய் உறவினரைப் பார்த்துட்டு வருவாராம். நாங்க போனப்போ ஸ்ரீகுருமஹா சந்நிதானம் அவர்களும், இளைய சந்நிதானம் அவர்களும் காலை வழிபாட்டுக்காக இந்த நீராழி மண்டபத்திற்கு வந்து கஜமுகனின் வழிபாட்டை முடித்துக்கொண்டு வந்து, நிஜமான கஜேந்திரனுக்கும், கோ பூஜையும் செய்தார்கள். நம்மாளு என்ன அழகாய்த் தலையைத் தலையை ஆட்டினார் தெரியுமா? முன்னால் அநுமதி வாங்காத காரணத்தால் அதை வீடியோ எடுக்க முடியலை. :( நம்மாளின் படம் ஏற்கெனவே போட்டேன். இருந்தாலும் அலுக்காதே, திரும்பவும் போடறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
திரும்பப் பார்க்க எங்களுக்கும் அலுக்கவில்லை. அழகுக் குட்டி:)!
ReplyDeleteதாமரைகள் தடாகத்தையும் பார்ப்பவர் மனதையும் நிறைத்து நிற்கின்றன.
இவ்ளோ தாமரைகளா !
ReplyDeleteபார்க்க எவ்வளோ அழகாக இருக்கிறது
குட்டியானையும் தான் !
திருப்பனந்தாள் என்பது ஊரின் பெயரா ;அதுவும் கும்ப கோணம்- த்திற்கு அருகில் தான் இருக்கிறதா கீதாம்மா
ReplyDeleteவாங்க ரா.ல. படம் போட்டால் எங்கே இருந்தாலும் ஓடி வந்துடறீங்க, நன்றிங்க.
ReplyDeleteவாங்க ப்ரியா, குட்டி யானை கொள்ளை அழகும். தலையைத் தலையை ஆட்டின அழகு இன்னும் கொள்ளை கொண்டது.
ReplyDeleteதிருப்பனந்தாள் பற்றி என் பயணங்களில் பதிவுகளிலே எழுதி இருக்கேன், படிச்சுப் பாருங்க,. குமரகுருபரர் ஏற்படுத்தின மடம், ஊரின் பெயர் திருப்பனந்தாள் தான். கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் வழியில்/ சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் வரும். கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் இருக்கலாம்.
அல்லி சந்தேகத்தை விட குட்டியானை கவனத்தைக் கவர்கிறது!
ReplyDeleteகுட்டியாய் இருக்கும் எதுவுமே மனதைக் கவரும்.
Delete