Saturday, May 28, 2011

வறண்ட கொள்ளிடத்தில் பயணம், :(

 இம்முறை கும்பகோணம் சென்றபோது காரிலேயே செல்ல நேர்ந்தது. கொஞ்சம் வருத்தம் தான். என்ன இருந்தாலும் ரயில் மாதிரி வராது. அதுவும் திடீர்னு பயணத்திட்டம் கன்னா அண்ட் பின்னாவாக மாற்றப்பட்டதால் முன்னர் ஏற்பாடு செய்திருந்த ஏ.சி. வண்டி கிடைக்காமல் சாதாரண வண்டியிலேயே போனோம். போகும்போது சென்னையிலே மழை கொட்டித் தீர்த்தது. போனதும் கும்பகோணத்தில் கொட்டித் தீர்த்தது. ஒண்ணும் தெரியலை. வரச்சே ரொம்பக் கஷ்டப் பட்டோம். அதுவும் அணைக்கரைப்பாலம் உடைஞ்சிருந்ததைச் செப்பனிடவே இல்லை. ஒரு பக்கப் பாலத்திற்கு முன்னரே அரசுவண்டிகள் நின்றுவிடும். அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக வண்டிகள், பேருந்துகள் அங்கே நிற்கும். கனரக வாகனங்கள் அனைத்தும் அங்கேயே நிற்கும். கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை மட்டும் அநுமதித்துக்கொண்டிருந்தனர். இம்முறை சென்னை-கும்பகோணம் செல்லும் மார்க்கத்தின் முதல் பாலத்தில் கார், ஆட்டோ செல்ல அநுமதி. இரண்டாம் பாலத்தை மூடி விட்டார்கள். ஆகவே கொள்ளிடத்திலே வண்டி இறங்கித் தான் போச்சு. என் கல்யாணம் ஆகி முதல் முதல் ஊருக்கு வந்தப்போ அரசலாற்றில் இறங்கினது நினைவு வந்தது. அப்போ மாட்டு வண்டி, ஆறும் சின்னது அரசலாறு. இப்போப் பெரிய வண்டி, கார். கொள்ளிடம்.
[Image] முன் கூட்டித் தயாராய் இல்லாததால் சட்டுனு படம் எடுக்க முடியலை. அதனால் திரும்பி வரச்சே தயாராய்க் காமிராவை வைத்துக்கொண்டிருந்தேன். அப்போ எடுக்கப் பட்ட படங்கள் இவை. இதைப் பார்த்தால் கொள்ளிடத்தில் மணல் எவ்வளவு ஆழமாய் அள்ளப் பட்டிருக்கிறது என்பதும் புரிய வரும். :(
 
 
 
 கீழே உள்ள படத்தில் காணும் இடத்தில் தான் எதிர்க்கரைக்கு மேலே ஏறவேண்டும். கரை நல்ல உயரமாகத் தான் இருக்கு.
 
Posted by Picasa
மணலும், இல்லாமல் நீரும் ஓடாமல் ஆறு வறண்டு போய்க் கற்களாய்க் காட்சி அளிக்கிறது. கல் மனம் படைத்து அன்பும், கனிவும் இல்லாத மனிதனைப் போல் காண்கிறது. :((((((( பூமித் தாயின் மார்பகங்கள் வற்றிவிட்டனவோ எனத் தோன்றுகிறது.

3 comments:

  1. கஷ்டமா இருக்கில்லை??? இந்தத் தரம் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. ஆனால் நாங்க சிதம்பரம், சீர்காழி வழியாச் சுத்திப் போயிட்டோம், அணைக்கரை வழியைத் தவிர்த்துவிட்டோம். :(

    ReplyDelete