வீட்டைக் காணோம்; சில தினங்கள் முன்பு எங்க வீட்டின் எதிரே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுபவர் வீட்டின் இருபக்கமும் கொட்டி இருந்த கட்டுமானப்பொருட்கள். இவற்றுக்கு இடையே வீடே மறைந்துவிட்டது. வீட்டின் வாயிலில் கோலம் போடவே மணலை மிகுந்த சிரமத்துடன் அகற்ற வேண்டியதாகிவிட்டது. இத்தனைக்கும் முதல்நாளே அந்தக் கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
உடனே நடவடிக்கை எடுக்கிறேன்னு சொன்னார். எடுத்துவிட்டார், வீட்டை விட்டு அவசரத்துக்குக் கூட வெளியே வரமுடியாதபடி. :)))))))
அப்பாடா, ஒரு வழியாக முறத்தினால் மணலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டு வாசலைக் கண்டு பிடிச்சுட்டேனே! ஹையா, ஜாலி!!
Sunday, July 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
இப்படியா செய்வார்கள்:(?
ReplyDeleteஇது ஒண்ணுமே இல்லை; கூரை போடுகையில் கலவை போட்டதே எங்க வீட்டு வாசலில் தான். வீட்டை விட்டு வெளியே வந்தால் கலவையில் தான் கால் வைக்கணும். :(
ReplyDeleteஒண்ணும் சொல்ல முடியலை; சொன்னால் மறுநாள் தொந்திரவு வேறு ரூபத்தில் வரும். :))))) சொந்த வீடாய்ப் போச்சு, இல்லைன்னா என்னிக்கோ வீட்டைக் காலி செய்திருக்கலாம். :(
இந்த அழகிலே எங்க வீட்டையும் கொடுத்துடுனு வேறே கேட்டுட்டு இருக்காங்க.