Saturday, August 13, 2011

மீன் கொத்தியைப் பிடிச்சேனே!

 
Posted by Picasa
புதுசா விருந்தாளி வந்திருக்கார்னு ஒரு வாரம் முன்னாடியே தெரிஞ்சது. புது ஆள்னா உள்ளே விடமாட்டாங்க போல! :D ஒரே கூச்சல், குழப்பம். என்னனு பார்க்கப் போனால் எல்லாம் கப், சிப் காராவடை, காலணாவுக்கு ஓசி வடைனு அமைதி! அதிலும் இந்தத் தேன்சிட்டுங்க இருக்கே, ஜன்னல் வழியாப் பார்த்தால் இத்தனூண்டு இருந்துண்டு ஒரே கூச்சல், கூப்பாடு, அதட்டல்! மெல்ல மெல்லப் போனால் எப்படித் தான் தெரியுமோ~ எல்லாம் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்கே எல்லாமும் இப்போ மஞ்சக் கலரில் தான் வருதுங்க. பச்சைக் குருவியைக் கொஞ்ச நாளாக் காணோம்.

மேலே உள்ள விருந்தாளி நம்ம மீன் கொத்தனார் தான். இவர் ஒண்ணும் புதுசு இல்லை. நல்லாக் கிணத்துக்குள்ளே டைவ் அடிப்பார். இந்த வருஷம் தண்ணீர் சீக்கிரம் வந்துடுச்சா, ஏதானும் கிடைக்குமானு பார்க்க வந்திருக்கார் போல. இதுங்களோ சாகபட்சிணிங்க. நம்ம மீன் கொத்தனாரோ மீன் தான் சாப்பிடுவார். அப்புறமும் எதுக்குச் சண்டை! அதான் புரியலை! எல்லாமும் சேர்ந்து ஒத்துமையாப் பாடி ஆடலாம் இல்லை! அதை விட்டுட்டு,

எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்.

நான் வாழ யார் பாடுவார்,

என் பாடல் நான் பாடப்பலர் ஆடுவார்,

இனி என்னோடு யார் ஆடுவார்!

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்!

அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்

அப்படினு சிவாஜி ஸ்டைல்லே பாடிக்கும் போல! அவ்வளவு சத்தம்! :))))))))))


மேலே உள்ள படம் க்ராப்பிங் பண்ணறதுக்கு முன்னாடி. கீழே உள்ளது க்ராப்பிங் செய்தது. எப்போதும் போல் என் சாய்ஸ் ஒரிஜினலுக்குத் தான். என்ன கஷ்டம்னா, நான் படம் பிடிக்கப்போறது தெரிஞ்சு பின்னாடி வீட்டுக் கொடிக்குப் போய் உட்கார்ந்துடுச்சு, சரி, தொந்திரவு செய்ய வேண்டாம்னு அவங்க வீட்டுக் கொடியிலே உட்கார்ந்திருக்கிறச்சேயே எடுத்தேன். அதான் கொஞ்சம் பிடிக்கலை! :(

 
Posted by Picasa
மூக்கோட ப்ரவுன் நிறம் எண்ணெய் போட்டாப்போல் பள பளா!

8 comments:

  1. நன்றி ராம்ஜி யாஹூ, எப்படியானும் தேன்சிட்டைப்பிடிக்கணும். ஓடிப் போயிடுது. :(

    ReplyDelete
  2. தேன் சிட்டுங்கறது FINCH ஆ .இங்க நம்ப இடத்துல POLAR BLAST க்கப்புறம் இந்த குட்டி பறவைகள் தான் . நீங்க சொல்லற மாதிரி கீச்கீச் சனு என்ன இவ இன்னும் சாப்பாடு போட வரலைன்னு கூப்பாடு போட்டுண்டிருக்கும் . போனா கப்சிப் தான் :))போட்டுட்டு போனப்பறம் வா வா சாப்பாடு போட்டுட்டா நு பாடி ஆடி கூப்பிடும்:))மஞ்சள் கருப்பு. பச்சை மஞ்சள், நீலம் மஞ்சள் கலந்த கலர்கள் விதவிதமா . மஞ்சாடி குருவிங்கறது இதுதானோனு நினைச்சேன்.இப்ப ரெண்டு நாளா BELL BIRD பாடி தீக்கறது . அதிசயமா இருந்தது . இதை ஊருக்குள்ள USUAL ஆ பாக்கறது RARE.

    ReplyDelete
  3. இல்லை ஜெயஸ்ரீ, finch இல்லைனே நினைக்கிறேன். இன்னிக்கு உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன், அதிலே பாருங்க, நீங்க பார்த்ததும் அதுவும் ஒண்ணா இருக்கானு தெரியும்.

    ReplyDelete
  4. finch னா சிட்டுக்குருவியோ?? இல்லாட்டி ஆனைச்சாத்தான் குருவியா?? புரியலை எனக்கு, பறவைக்காதலர் கிட்டேயே கேட்கிறேன். :))))

    ReplyDelete
  5. அடடே... நானே இப்போதுதான் பார்க்கிறேன். (அதென்ன நானே.. என்றெல்லாம் நினைச்சுக்கக் கூடாது!!!)

    ReplyDelete
  6. ஹா ஹா...

    புகைப்பட வல்லுநர் கீசா மேடம் வாழ்க

    ReplyDelete
    Replies
    1. அட? இரண்டு பேரும் சத்தம் போடாம இங்கே வந்திருக்கீங்களே இரண்டு வருஷம் முன்னாடி! எதுக்கு?

      Delete