Saturday, November 5, 2011

சிட்டுக்குருவி பாடுது??

 
Posted by Picasa
வீட்டுத்தோட்டத்தில் சிட்டுக்குருவி கீச்சிடுவது போல் சப்தம் வந்து கொண்டே இருந்ததா? சரினு வெளியே போய்ப்பார்த்தேன். கடைசியில் (ஆரம்பத்திலிருந்தே) அது சிட்டுக்குருவி இல்லை. வேறே ஏதோ பறவை; கொஞ்சம் குருவி, கொஞ்சம் குயில் கலந்து காணப்படுகிறது. மெல்லத்தான் கிட்டே போனேன். ஆனால் எப்படியோ தெரிஞ்சு கொண்டு பறந்து போய் வேலியின் மேலே உட்கார்ந்துவிட்டது. இன்னும் கிட்டப் போக முடியவில்லை. ஜூம் செய்ததும் சரியா வர மாட்டேங்குது. தொ.நு.நி. பாக்காதீங்க இந்தப் படத்தை. இது உங்களுக்கானது அல்ல. என்னைப் போல் க.கு.க்களுக்கு.


 
Posted by Picasa
விருக்ஷி பூத்துட்டு இருக்கு; இன்னும் கொஞ்ச நாட்கள் தான்; அப்புறமாக் குளிரிலே வராது.


 
Posted by Picasa
அரளி வரும்னு சொல்றாங்க. ரோஜாவும் வருமாம்.   ஆனால் நடைப்பயிற்சிக்குப் போறச்சே பார்க்கும் ரோஜாச் செடிகளில் பூக்கள் முழுதாகக் காணமுடியவில்லை. ராத் கி ரானி தான் நிறையப் பூத்துட்டு இருக்கு. கல்பட்டார் சொன்ன போயர் பேர்ட் மாதிரி ஒண்ணும் இருக்கு. ஒரு வேளை நைட்டிங்கேலோ?

2 comments:

  1. படங்கள் அழகு. ஏதோ ஒரு குருவி. கேட்ட கானம் இழுத்துப் போயிருக்கிறது உங்களை:)!

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. பல நாட்கள் கழித்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete