Sunday, October 27, 2013

விந்திய மலைத் தொடர்!

கார்லே போகையிலே விந்திய மலைத் தொடரின் ஒரு சிறிய குன்றுப் பகுதியை மட்டும் எடுக்க முயன்றதில் வந்த படம் இது.  அடுத்துக் கீழே புல் தரையில் மேயும் மாடுகளும், பின்னணியில் இன்னொரு துணைக்குன்றும்.



அடுத்துக் கீழே சித்திரக்கூடம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கையில் நம் முன்னோர்கள் விளையாடுவதைப் படம் எடுக்க முயன்றேன்.  காமிராவை அவங்க கேட்பாங்கனு தோணினதாலே, கையிலிருந்த செல்லிலேயே அவங்களுக்குத் தெரியாமல் சுட்டது இது.


இரண்டு பேரும் கணவன், மனைவினு பார்த்ததுமே புரிஞ்சது.  பெரியவரா இருக்கிறவர் தான் ஐயா.  அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச்  சாப்பிட்டு விட்டார்.  ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார்.  இந்தப் படம் ஒருத்தர் கையிலிருந்த பஜ்ஜி, போண்டாவைத் தட்டிப் பறித்தப்போ எடுத்தது.  சுதாரிச்சுக்கறதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்க. ஆனால் அவங்களைப் படம் எடுக்கிறோம்னு புரிஞ்சுக்கறாங்க.  அதனால் கவனமா இருக்க வேண்டி இருக்கு! :))))

6 comments:

  1. சுட்டது நல்லாத்தான் இருக்கு...

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. கடைசிப் படத்தை எடுத்த அனுபவம் சுவாரஸ்யம்:)!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரா.ல. கையிலே காமிராவை வைச்சுக்கவே முடியலை. ஹான்ட்பாகைத் தோளோடு சேர்த்து மாட்டிட்டு அது பிடுங்கிடப் போகுதேனு தலைப்பால் மூடிக் கொண்டு போக வேண்டி இருந்தது. :))))

      Delete
  3. நல்ல படங்கள்.
    நல்ல அனுபவம்:) ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு மாதேவி நன்றி.

      Delete