வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!
Friday, December 31, 2010
நீலவானம், பச்சைவயல், கறுப்பு சாலை!
வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!
Thursday, December 30, 2010
காய்களால், பழங்களால் அலங்காரம்!
Monday, December 27, 2010
ஸ்ரீ ரமணாஸ்ரமம், திருவண்ணாமலை!
பகவான்
நவராத்திரியின் போது திடீர்ப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு ஒருநாள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டும் போனோம். சுற்றுலாக் குழுவோடு சென்றதாலும் செல்லும்போதே மூன்று மணி ஆகிவிட்டதாலும் மற்ற ஆசிரமங்கள் போக முடியலை. கிரிவலப் பாதையில் முதலில் வந்தது ஸ்ரீரமணாஸ்ரமம். அவங்க அநுமதியோடு எடுத்த சில படங்கள் இங்கே ஒவ்வொன்றாய்க் காணலாம்.
Sunday, December 12, 2010
Tuesday, November 30, 2010
கார்த்திகை தீபத் திருவிழா!
போன வருஷம் எடுத்த படம் இது. கார்த்திகைக்குப் போன வருஷம், பையர், மருமகள் எல்லாரும் இருந்தாங்க. அப்போ விளக்கு ஏத்தினதும் நிவேதனம் பண்ணிட்டு எடுத்த படம். அதான் நிவேதனம் எல்லாத்தையும் எடுத்து வைச்சாச்சு. ஹிஹிஹி. இந்த வருஷம் படம் எடுக்கிற மனநிலையில் இல்லை. சும்ம்ம்ம்மா விளக்கு ஏத்தினோம். போன வருஷ நினைவுகளோட இருந்தது தான் நிஜம்.
Sunday, September 19, 2010
சீதா கல்யாணமே வைபோகமே!
Saturday, September 4, 2010
ஆறு வித்தியாசங்களைச் சொல்லுங்க!
Friday, September 3, 2010
தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்!
Friday, August 6, 2010
நாரத்தையா, சாத்துக்குடியா??
இப்போப் பூத்துக் காய்ச்சிருக்கு. மனசெல்லாம் சந்தோஷம். நேத்தே இதைப் பகிர்ந்துக்கணும்னு நினைச்சால் கூகிள் தடை போட்டுப் பழிவாங்கவே அதிலே நேரம் போயிட்டது.
வழிமுறை: சந்திர கிரஹணத்தின் போது இரவில் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறு பெண்களை விட்டு மரத்தின் வேரில் செருப்பால் அடிக்கச் செய்வார்கள். அதன் பின்னர் புட்டு செய்து மரத்துக்குப் படைத்து நிவேதனம் செய்வார்கள். இப்படிச் செய்தால் காய்க்காத மரம் பூத்துக் காய்க்கும் என்பது நம்பிக்கை.
Monday, July 26, 2010
அழகான அரசலாறு அலங்கோலக் காட்சியில்!
வேலைக்கு உணவு திட்டத்தில் வேலை வாங்கிட்டு உணவும், பணமும் கொடுக்கிறதாய்ச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களோ, அல்லது அரசு அதிகாரிகளோ இந்த வேலையும் ஒரு வேலைதான் என்று கணக்கிலேயே எடுத்துக்கமாட்டாங்களா? இது முக்கியமில்லையா? எனக்குத் தெரிஞ்சு ஆற்றில் தண்ணீர் ஓடிப் பார்த்திருக்கேன் என்றால் இப்போக் கடந்த முப்பது வருடங்களாக இப்படி வறண்ட ஆற்றையே பார்க்கிறேன். இது என்ன நியாயம்? இது என்ன அலட்சியம்? ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போதெல்லாம் இதை எல்லாம் பார்க்கப் பார்க்க மனசும், உடம்பும் கொதிக்கிறது தான் மிச்சம். இதிலே விவசாய நிலங்களை எல்லாம் வீடுகள் கட்டவேண்டி ஒதுக்கிட்டும் வராங்க. விவசாயம் இல்லைன்னா எப்படிச் சாப்பிடப் போறோம்? இது கிராம மக்கள் அவங்களாவே தங்களுக்குள்ளாக செய்து கொள்ளவேண்டிய ஒரு வேலை. அதை எடுத்தாவது சொல்லலாமே?
Wednesday, June 23, 2010
பார்த்த சாரதி, உன்னைப் பார்த்த சாரதி!
ஓட்டமாய் ஓடிப் போய்ப் பிடிச்சோம் அவரை. இந்த இரண்டு வெள்ளைக்குடைகளும் திருவல்லிக்கேணி கோயிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வாண்டுப் பயல்கள் தங்கள் சேமிப்பில் இருந்து பெருமாளுக்காகச் செய்து கொடுத்தது. மொத்தம் நாலு குடைகள் பண்ணிக் கொடுத்திருக்காங்க பசங்க, அன்னிக்கு உற்சவத்தில் இரண்டு குடைகள் மட்டுமே எடுத்துட்டு வந்தாங்க. பசங்க இன்னும் பெரிய பெரிய திட்டங்களெல்லாம் அவங்க சேமிப்பிலிருந்து செய்யறதுக்கு வச்சிருக்காங்க. படம் எடுக்கப் போனால் கிட்டே போய் எடுக்க முடியலை. சரினு இந்த மட்டும் தள்ளி நின்னாவது எடுக்க விட்டாங்களேனு எடுத்தாச்சு. கோபுரம், முன் மண்டபம் எல்லாமும் எடுத்திருக்கு. ஆனால் அந்தப் படங்களைக் காணோமே?? எங்கே போச்சு?? ம்ம்ம்ம்ம்?? தேடணும். இந்த ஓ.எஸ். மாத்தினதிலே எது எங்கே இருக்குனு ஒண்ணுமே புரியலை. everything is upside down! :P
Thursday, June 10, 2010
Friday, April 30, 2010
ராமலக்ஷ்மி போட்ட மேக்கப்!
நாங்க தங்கின வீடு!
இதோ தெரியுதே, இதான் கொடைக்கானல் மலை. இரவிலே நல்ல மின்விளக்கு வெளிச்சங்களோட தெரியும். மலை அடிவாரத்திலே தான் எங்க ஊர் இருக்கு. பக்கத்திலே பெரியகுளத்திலே இருந்து நடந்தே மேலே ஏறலாம். அங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் ரொம்ப பிரசித்தி. அங்கே கொடைக்கானல் மலையிலிருந்து கீழே வரும் மஞ்சளாறு தண்ணி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும், தண்ணீரே குடிச்சாப்போதும்கற மாதிரி சுவையான சுவை. மஞ்சளாறு இறங்கி வர இடத்திலே தான் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் கோயில், மூங்கிலணை காமாக்ஷினும் சொல்லுவாங்க. கதவுக்குத் தான் பூஜை, வழிபாடுகள், மாலை, மரியாதை, அர்ச்சனைகள், தீபாராதனை எல்லாம். மூலஸ்தானத்தை இது வரை திறந்து பார்த்தவங்க இல்லை. அங்கே கூரை மாத்தறதுக்குக் குறிப்பிட்ட நாயக்கர் வம்சத்தாரின் கனவில் அம்மன் வந்து சொன்னதும், கண்ணைக் கட்டிக்கொண்டு ஏணி வழியா மேலே ஏறிக் கூரை மாத்துவாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை அப்படிக்கூரை மாத்தினாங்க. அப்புறமா மாத்தினதா நாங்க போனப்போ பூசாரிகள் சொன்னாங்க. இங்கே அர்ச்சனை, ஆராதனை வழிபாடுகள் செய்யறவங்க கர்நாடகாவின் போத்திகள் பரம்பரையைச் சேர்ந்தவங்கனு சொல்றாங்க. கோயிலைப் படம் எடுக்க முடியாது. அநுமதி இல்லை. அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.
என்னோட பெரியப்பா பையர் வீடு. கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார். இப்போ ஏதோ புஞ்சைக்காடு இருக்குனு சொல்றாங்க. அதை யாரோ குத்தகைக்கு எடுத்துட்டு ஒண்ணும் கொடுக்கிறதில்லைனும் கேள்வி. வீடு ஒண்ணு இருக்கு எதிர்ப்பக்கம். அதைப் படம் எடுத்தது, எங்கேனு காணோம், தேடிட்டு இருக்கேன். கறுபபா, இதோட பின்னூட்டத்தை யாருக்கானும் அனுப்பிட்டு என்னை எல்லாரும் திட்டப் போறாங்க! காப்பாத்துப்பா!
Wednesday, April 28, 2010
Monday, April 26, 2010
விட்டு விடு கறுப்பா!
என்னோட அப்பாவின் ஊரான மேல்மங்கலத்தில் வராஹ நதிக்கரையோரம் இருக்கும் படாளம்மன் கோயிலில் உள்ள கறுப்பண்ண சுவாமி. இவரைப் படம் எடுக்கணும்னு பையர் சொன்னதும் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்மாவே இருந்தது எனக்கு. அப்புறமா பூசாரி கிட்டே கேட்டோம். தாராளமா எடுக்கலாம்,அப்படினு உத்தரவு கொடுத்தார். படாளம்மனை மட்டும் எடுக்க முடியலை. அவளோட தர்பாரில் இவர் முக்கிய சேனாதிபதி! அபிஷேஹம் கிடையாது இவருக்கு. எங்க வீட்டுக் கல்யாணங்களில் முதல் பத்திரிகையை இவருக்குக் கொடுத்துடணும். இல்லாட்டிக் கோவிச்சுப்பார். அதுவும் பாக்கு, பழம் வைச்சுக் கொடுக்கணும். என் கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணா, தம்பி கல்யாணங்களிலே கொடுக்க முடியலைனு அம்மா கடைசி வரையிலே சொல்லிண்டே இருந்தா. இப்போ வருஷா வருஷம் போயிட்டு வராங்க அண்ணா, தம்பி குடும்பத்தோடு. எங்களுக்கு விசேஷப் பிரார்த்தனை இருந்ததால் நிறைவேற்றப் போனோம்.
படாளம்மன் கோயிலின் ஒரு பக்க நுழைவு வாயில். அந்தப் பக்கம் தெரியறது வராஹ நதி. நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் நுழைஞ்சுடும். இத்தனைக்கும் கோயிலில் இருந்து நதிக்குப் போகும் படித்துறையில் இருபது படிகளுக்கும் மேல் இருக்கு. மேல்படி அரை அடி அகலமே. கொஞ்சம் கால் வழுக்கினால் கீழே வராஹ நதிக்கரையோரம், புறாவே உந்தன் நினைவில்னு பாடிட்டுப் போகணும்! என்றாலும் அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இன்னமும் மாடுகளுக்குப் புல் வளர்க்க கிராமத்தில் நிலம் பொதுவில் தனியா ஒதுக்கி இருக்காங்க. அந்தப் பாலைச் சாப்பிட்டுப் பாருங்க! பசும்பால் தான் அந்தப் பக்கமெல்லாம். மாடெல்லாம் சின்னதாய் இருந்தாலும் அருமையான சுவையோடு கூடிய பாலை நிறையத் தரும்.
Thursday, April 22, 2010
வராஹ நதிக்கரையோரம்!
2007-ம் வருஷம் டிசம்பரில் ஆறுபடை வீடுகளுக்குப் போனோம். அப்போ என்னோட அப்பாவின் பூர்வீக ஊரான மேல்மங்கலம் கிராமத்துக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிப் போனோம். அங்கே இருந்த படாளம்மன் கோயில் வராஹ நதிக்கரையோரம் உள்ளது. கோயிலின் ஒரு வாசல் வழியாக நதியில் இறங்கும்படி இருக்கும். நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் வந்துடும். இது நாங்க முதல்லே போகறதுக்காகத் தொலைபேசியில் சொன்னப்போ கோயிலுக்குள்ளே வெள்ளம் இருக்கு வடியட்டும்னு சொன்னாங்க. வடிஞ்சு நாலு நாள் கழிச்சுப் போனோம். அப்போவும் நதியில் தண்ணீர் இருகரையும் தொட்டுக்கொண்டு போனது. இயற்கை என்னும் இளைய கன்னி கொஞ்சி விளையாடுவாள் அங்கே. மாடுகளுக்குப் பறிச்சுட்டுப் போற பசும்புல்லைப் பார்த்தாலே பாலின் சுவை நாக்கில் ஊறும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். கொடைக்கானல் சில கிலோமீட்டர்கள் தான்.
Sunday, April 4, 2010
பூ, பூவாப் பூத்திருக்கு!
Subscribe to:
Comments (Atom)






