Thursday, July 28, 2011

காஞ்சியிலே காமாட்சி!

 
Posted by Picasa
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே!

Tuesday, July 19, 2011

பிள்ளையார், பிள்ளையார்!

 
Posted by Picasa
எப்போவுமே அருமை நண்பர். நான் என்ன பேசினாலும், எப்போப் பேசினாலும்,என்ன பேசினாலும் கேட்டுப்பார். நேத்திக்கு ரா.ல. சங்கடஹரசதுர்த்திப் படம் போட்டிருந்தப்போ இவரைப் போடணும்னு நினைச்சேன். முடியலை. இன்னிக்குப் போட்டுட்டேன். திருப்பனந்தாள் தாமரைக் குளத்து நடுவிலே கோயில் கொண்டிருக்கார். இங்கேயும் கேதாரீஸ்வரர் கோயிலுக்கும் மாயவரம் வேதபாடசாலையில் இருந்து ஒரு பிரம்மசாரிப் பையர் வந்து பூஜை செய்கிறார். சனி, ஞாயிறு மாயவரம் போவாராம். இங்கேயே இருந்து சமைச்சுச் சாப்பிடறார் போல.நல்லா மந்திரங்கள் சொல்லி தீப ஆராதனை எடுத்து விபூதிப் பிரசாதம் கொடுத்தார். கேதாரீஸ்வரர் கோயிலைப் படம் எடுக்க அநுமதிக்கலை. இங்கே எடுத்துக்கோனு சொன்னாங்க.

Friday, July 15, 2011

எல்&டி, டிராக்டர் பூட்டி, வயக்காட்டை உழுது போடு

 
Posted by Picasa
போன படம் தான். ஓரளவுக்கு நகாசு வேலை செய்தேன். பக்கத்திலே இருந்த பாசன வாய்க்காலில் லேசாய்த் தெரியும் புகை போன்ற நிழலை எடுக்க முடியவில்லை. அதை எடுத்துட்டுப் போட மனசு வரலை. அதான் அப்படியே போட்டுட்டேன்.

Thursday, July 14, 2011

மணப்பாறை மாடு கட்டி

 
Posted by Picasa
மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்டை உழுது நட்டுட்டு இருந்தாங்களா, காமிரா பொட்டியிலே மாட்டிக்கிட்டதா? நினைவில்லை, சரினு செல்லினேன். கொஞ்சம் சரியா வரலை. அப்புறமா நகாசு வேலையும் பண்ணிப்பார்க்கிறேன். முதல்லே ஒரிஜினல் எப்படினு சொல்லணும் இல்ல?? அதான்.

Sunday, July 10, 2011

வீடு எங்கே போச்சு?? காணோமே!

 
Posted by Picasa
வீட்டைக் காணோம்; சில தினங்கள் முன்பு எங்க வீட்டின் எதிரே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுபவர் வீட்டின் இருபக்கமும் கொட்டி இருந்த கட்டுமானப்பொருட்கள். இவற்றுக்கு இடையே வீடே மறைந்துவிட்டது. வீட்டின் வாயிலில் கோலம் போடவே மணலை மிகுந்த சிரமத்துடன் அகற்ற வேண்டியதாகிவிட்டது. இத்தனைக்கும் முதல்நாளே அந்தக் கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
 
Posted by Picasa
உடனே நடவடிக்கை எடுக்கிறேன்னு சொன்னார். எடுத்துவிட்டார், வீட்டை விட்டு அவசரத்துக்குக் கூட வெளியே வரமுடியாதபடி. :)))))))

 
Posted by Picasa
அப்பாடா, ஒரு வழியாக முறத்தினால் மணலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டு வாசலைக் கண்டு பிடிச்சுட்டேனே! ஹையா, ஜாலி!!

Thursday, July 7, 2011

பூவே, பூச்சூட வா!

 எங்க வீட்டிலே நந்தியாவட்டைனு வாங்கி வைச்ச செடியிலே பூத்திருக்கிற பூ. வெள்ளை ரோஜா மாதிரிப் பெரிசா இருந்தது. காலம்பர எழுந்ததும் கண்ணிலே வெள்ளையாய் அந்த இருட்டில் தென்பட்டது. விடிஞ்சதும் காமிராவை எடுத்துட்டுப் போய்ப் படம் எடுத்தேன்.
 ஒரு சிலர் பிரம்ம கமலம்னு சொல்றாங்க. சிலர் பாரிஜாதம் இது தான் என்கிறாங்க.
 
Posted by Picasa
என்னனு தெரியலை. ஆனால் இப்போ இதையும் சேர்த்து இரண்டு செடிகள் இருக்கின்றன. இதிலே இப்போத் தான் இரண்டாவது பூப் பூத்திருக்கு.