Monday, March 21, 2011

என்ன இது? என்ன இது??

 
Posted by Picasa
இது என்னனு கண்டுபிடிக்கிறவங்க பதிவிலே என் சார்பிலே வேறே யாரானும் வந்து பின்னூட்டம் போடுவாங்க. இது ஒரிஜினல்.
 
Posted by Picasa
இதுக்கு மேக்கப் போட்டிருக்கேன். மேக்கப்பே பிடிக்காத எனக்கு இப்போ இப்படி ஒரு நிலைமை! எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

Saturday, March 19, 2011

நிலவைச் சூரியனா மாத்திட்டேன்! :D

 
Posted by Picasa
ஹிஹிஹி, நேத்திக்கு எடுத்த படத்திலே கொஞ்சம் விஷமம் பண்ணினேன். பின்னாடி ஒரு பிம்பம் வர வரைக்கும் விஷமம் பண்ணிட்டு அதை எடுத்துப் போட்டிருக்கேன். அப்புறம் பார்த்தா அதுக்கும் பின்னாடியும் ஒரு நிழல் விழுந்திருக்கு. இது எப்பூடி இருக்கு??

அந்த நிலாவைத் தான் நான் கையிலே பிடிச்சேன்!

 
Posted by Picasa
இன்னிக்கு வர நிலாவைக் கையிலே பிடிக்கணும்னு மாடிக்குப் போனா பக்கத்துக் கட்டட வேலைக்குப்போட்டிருக்கும் மறைப்பு நிலாவையே காட்டலை! தெருவிலே இருந்து தான் தெரியும் போல! ஒரு நிலா பார்க்கக்கூட இவ்வளவு கஷ்டமானு மனசு நொந்து போச்சு. ஏற்கெனவே இருக்கிற வருத்தம் போறாதுனு இதுவேறேயானு நினைச்சுட்டுக் கொஞ்சூண்டு தெரிஞ்ச நிலாக்கீற்றைப் பிடிச்சேன். முடியலை. கீழே இறங்கிட்டேன். அப்புறமா ரங்க்ஸ் வந்து நிலாவை எடுத்தியானு கேட்டதும் தெரியலைனு சொன்னேன். வா, மாடிக்குனு கூப்பிட்டார். ஆனால் அதுக்குள்ளே நிலா நல்லா மேலே வந்தாச்ச்ச்ச்ச் :( என்ன செய்ய முடியும். 
Posted by Picasa
இருக்கிற அளவிலேயாவது எடுக்கலாம்னு தெருவுக்குப் போனா அப்போவும் கட்டடவேலைக்குப் போட்டிருக்கும் ஷெட்டும் சாமான்கள்னு ஒரே தொந்திரவு. சாமி, இந்த செங்கல், ஜல்லி, சிமெண்டிலே இருந்து எனக்கு என்னிக்கு விடுதலைனு நினைச்சுட்டே கொஞ்சம் தள்ளிப்போய் எடுத்தேன். இருட்டிலே ஜூம் பண்ணறதுக்குப் பதிலாச் சின்னது பண்ணி இருக்கேன்னு படத்தை அப்லோட் பண்ணினால் தான் தெரியுது! :((((  
Posted by Picasa
போகட்டும், நம்ம அதிர்ஷ்டம் தான் தெரிஞ்சு கிடக்கேனு விட்டுட்டேன். வந்த வரைக்கும் போட்டாச்ச்ச்ச்ச்ச்ச்.

Friday, March 18, 2011

பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பார், பார்!

 
Posted by Picasa
அட, தேன் சிட்டுத் தான் இன்னும் மாட்டிக்கலை, என்னடா இதுனு யோசிச்சேன். அப்போப் பார்த்தா இந்தப் பாரிஜாதம் என்று அழைக்கப் படும் செடியிலே மொட்டு வரும்போதே அங்கே இருந்தது இந்த வண்ணாத்திப் பூச்சி. அசையவே இல்லை. கொஞ்சம் பயமாவே இருந்தது. லேசாத் தொட்டுப் பார்த்தேன். உயிரோடு இருக்குனு புரிஞ்சது. சரினு கிட்டக்கக் காமிராவைக் கொண்டு போய் வெவ்வேறு இடங்களில் வெளிச்சம் வராப்போல் எடுத்தேன். நல்ல கறுப்புக் கலர் வெள்ளைப் புட்டா போட்ட வண்ணாத்திப் பூச்சி இரண்டிலேயும் வேறே வேறே நிறம் காட்டுது.  
Posted by Picasa
கண்டுபிடிங்கப்பா ஆறு வித்தியாசங்களை! :P

சொல்ல மறந்துட்டேனே, இது மேக்கப்பெல்லாம் போடாமல் ஒரிஜினல். நிபுணர்கள் கண்டு பிடிச்சிருப்பீங்க. இருந்தாலும் சொல்லிக்கிறேன். :)))))

Monday, March 14, 2011

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :(

 
Posted by Picasa
ஒரு காலத்திலே எங்க மாமனார் குடும்பத்தின் பரம்பரைத் தென்னந்தோப்பு. இப்போ கை மாறியாச்ச்ச்ச். இதை எல்லாம் பார்த்துப் பெருமூச்சுத் தான் விட முடியும். அப்போ இருந்த நிலைமையிலே கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு இருக்க முடியாது என்பது போன்றதொரு கஷ்டமான நிலைமை. இப்போக் கொஞ்சம் மாறி இருக்கு. ஆனால் பாடுபட உடலில் இப்போத் தெம்பும் இல்லை. நிலங்கள் வாங்கும் விலையிலும் இல்லை. பார்க்கவாவது முடியுதே! :(

அறுவடை செய்ய வாங்க!

 
Posted by Picasa
கும்பகோணத்திலே இருந்து பரவாக்கரைக்கு வரும் வழி. வழிலே பொய்யாப் பிள்ளையார் கோயிலுக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்துட்டு ஊருக்குள் நுழையும் வழியில் கண்ட வயல்கள். முழுசாய்க் கதிர்கள் வந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நேரம். எல்லாம் தலை சாய்ந்து கிடப்பதைப் பார்க்கலாம். அதோ தூரத்தில் தெரியுதே, அதான் சிவன் கோயில். மாசிலாமணீஸ்வரர். திருமூலர் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறதா ஒரு ஆய்வு சொல்லுது. கோயில் நாங்க போனப்போ திறக்கலை. :( இந்தக் கோயிலை முழுதும் இடிந்த நிலையிலேயே பல வருடங்கள் பார்த்திருந்தேன். இப்போத் தான் பத்து வருஷம் முன்னாடி திருப்பணி செய்து கும்பாபிஷேஹம் செய்தாங்க. ஆனாலும் இன்னமும் ஈசனைக் கவனிப்பாரில்லை. எப்போ விடியும்னு பார்த்துட்டு இருக்கோம்! :(

Tuesday, March 8, 2011

பச்சை நிறமே, பச்சை நிறமே!

 
Posted by Picasa
படம் எடுத்து மாசக்கணக்கா ஆச்சு. குயில் குஞ்சு ஒண்ணைக் காக்கா துரத்தினப்போ அது வீட்டுக் காம்பவுண்டிலே வந்து உட்காரப் படம் எடுக்கத் தயாரானா, வேப்பமரத்திற்குள்ளே போய் ஒளிஞ்சுண்டது. :( விடாமல் எடுத்தேன். காமிராவில் நல்லாத் தெரிஞ்ச குயில் குஞ்சு இங்கே படத்திலே தெரியலை. கஷ்டப் பட்டுத் தேடிக் கண்டு பிடிச்சேன். இன்னும் கொஞ்சம் வேலை செய்யணுமோ?? ரா.ல. வந்து சொல்லுவாங்க.

Saturday, March 5, 2011

காவேரி ஓரம், கதை சொன்ன காலம்!

இது காவேரியின் ஒரு கிளை நதி. தஞ்சை, கும்பகோணம் பக்கம் கிளை நதிகளையும் காவேரி என்றே சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தால் இதுவும் காவேரி தான். பாலத்தைக் கடந்து வண்டியிலே போகும்போது எடுத்தது. பாலத்தின் மரக் கைப்பிடியும் சேர்ந்து வந்திருக்கு. காமிராவை மேலே மட்டும் தெரியும்படி வைத்து எடுக்க முடியலை. க்ராப், மொட்டை எதுவும் வேண்டாம்னு விட்டுட்டேன். (க்ர்ர்ர்ர்ர்ர்ர், முயற்சி பண்ணியும் வரலை! அது என்னமோ பிடிவாதமா போகலை! அதை எடுத்தால் தண்ணீர் கொஞ்சம் போலத் தான் தெரியுது. சரி, தொலைனு விட்டுட்டேன்.

ம்ஹும், மறுபடியும் பார்த்துட்டேன். க்ராப்பிங்கிலே கரை ஓரத்துச் செடிகள், மரங்களை மட்டும் எடுத்துக்கச் சொல்லுது. நமக்கு முக்கியம் தண்ணீரோடு ஓடும் நதி ஆச்சே? மறுபடியும் முயன்று பார்த்துட்டுத் திரும்பப் போடறேன். சொல்ல மறந்துட்டேனே, இந்தக் காவேரி ஓரம், நிறையக் கதை இருக்கு சொல்ல.நகாசு வேலை செய்தாச்சு. என்ன இருந்தாலும் நகாசு இல்லாமல் இருக்கிற அழகு வராதுனு தோணுது! :(