Wednesday, June 23, 2010

பார்த்த சாரதி, உன்னைப் பார்த்த சாரதி!

மே மாதம் பதினேழாம் தேதியன்று எதிர்பாராமல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைப் பார்க்கணும்னு நம்ம ரங்க்ஸுக்கு ஆசை வர, சரினு ஒரு வண்டி ஏற்பாடு செய்துண்டு மத்தியானமா நாலு மணிக்கு மேல் கிளம்பிப் போனோம். உள்ளே மூலவரைப் பார்த்தாச்சு. ஆனால் அவர் பார்க்க விரும்பினது பார்த்தசாரதியை. அவர் ஜம்முனு உற்சவத்துக்குக் கிளம்பிட்டார். முன்னாடி மண்டபத்தில் இருப்பார்னு சொன்னாங்கனு அங்கே போனால் வீதிவலம் கிளம்பிட்டார்.

ஓட்டமாய் ஓடிப் போய்ப் பிடிச்சோம் அவரை. இந்த இரண்டு வெள்ளைக்குடைகளும் திருவல்லிக்கேணி கோயிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வாண்டுப் பயல்கள் தங்கள் சேமிப்பில் இருந்து பெருமாளுக்காகச் செய்து கொடுத்தது. மொத்தம் நாலு குடைகள் பண்ணிக் கொடுத்திருக்காங்க பசங்க, அன்னிக்கு உற்சவத்தில் இரண்டு குடைகள் மட்டுமே எடுத்துட்டு வந்தாங்க. பசங்க இன்னும் பெரிய பெரிய திட்டங்களெல்லாம் அவங்க சேமிப்பிலிருந்து செய்யறதுக்கு வச்சிருக்காங்க. படம் எடுக்கப் போனால் கிட்டே போய் எடுக்க முடியலை. சரினு இந்த மட்டும் தள்ளி நின்னாவது எடுக்க விட்டாங்களேனு எடுத்தாச்சு. கோபுரம், முன் மண்டபம் எல்லாமும் எடுத்திருக்கு. ஆனால் அந்தப் படங்களைக் காணோமே?? எங்கே போச்சு?? ம்ம்ம்ம்ம்?? தேடணும். இந்த ஓ.எஸ். மாத்தினதிலே எது எங்கே இருக்குனு ஒண்ணுமே புரியலை. everything is upside down! :P

Thursday, June 10, 2010

ஆனை பாருங்களேன்!


மனசே சரியில்லாமல் இருக்கறச்சே ஆனையைப் பார்த்தாலே ஒரு குஷிதான். தஞ்சாவூர்க் கோயிலில் எடுத்தது.