Sunday, May 10, 2009

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

ஹூஸ்டனுக்கு அருகே உள்ள கால்வெஸ்டனின் பறவைகள் பூங்காவில் எடுத்த படம் இது. வித விதமான பறவைகள். வித விதமான நிறங்களிலே. நிறங்களின் வண்ணக்கலவை படைத்தவனின் ரசனையைச் சுட்டுகின்றது. என்ன ஆச்சரியம், சிவப்பு நிறப் பெயிண்டால் கூட இவ்வளவு சிவப்பைக் கொண்டுவர முடியாது. கழுத்துக் கிட்டேயும், கால்களிலேயும் பாருங்க, இளஞ்சிவப்பு நிறம், அங்கே என்னமோ தண்ணீரை விட்டுத் துடைச்சு எடுத்தாப்போல நிறம் கொஞ்சம் மங்கிக் காண்கின்றோம். அதுவும் அந்த நிறச் சேர்க்கையில் செய்திருக்கும் அற்புதங்களைக் காணக் கண் போதாது. மீன்களின் நிறச் சேர்க்கை அதிசயிக்க வைத்தது. படங்களைக் காணோம். ஒளிஞ்சுட்டிருக்கு போல. இது தான் எனக்குப் புரியறதில்லை. பிறப்பின் ரகசியத்தைப் போல். நான் தேடறச்சே படமே சரியாக் கிடைக்கிறதில்லை.
ஆனால் என்னைத் தவிர வேறே யாருமே கணினி பக்கம் வரதும் இல்லை. அப்புறமா எங்கே போகும் படங்கள் எல்லாம்? சிருஷ்டியின் ரகசியம் கூடப் புரிஞ்சுடும் போலிருக்கு. இந்த நீலக் கிளிகளின் நீலத்தைப் பார்த்தால் கண்ணன் நீல நிறமாய் ஒளிர்ந்தான் என்பதையும் தாராளமாய் நம்ப முடியுது இல்லையா?? ஒண்ணோட ஒண்ணு கொஞ்சிக்கிட்ட இதுங்க படம் எடுக்கிறப்போ வெட்கம் இல்லாமல் போஸ் கொடுத்துடுச்சு. இவை பெலிகான் வகைனு சொல்றாங்க. தெரியலை. யு.எஸ்.ஸில் இந்த வசந்த காலத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்களிலும், மற்றப் பூங்காக்களிலும் பறவைகளைக் காண முடியும். மற்ற சமயங்கள் இவை எல்லாமே வெளிநாடுகளுக்கு விருந்தாளிகளாய்ப் போயிடும். இந்தப் பறவைகளுக்குனு செயற்கை நீரூற்றுக்களை உண்டாக்கி அதனோட சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே அது பழகும்படியாய் வசதி செய்திருக்காங்க. இன்னும் இருக்கு படங்கள், ஆனால் எங்கே போச்சு???? தேடணும்! :(

8 comments:

  1. நான் கூட 100 பறவைகள் படம் வச்சு இருக்கேன்

    ReplyDelete
  2. நான் கூட 100 பறவைகள் படம் வச்சு இருக்கேன்

    ReplyDelete
  3. நான் கூட 100 பறவைகள் படம் வச்சு இருக்கேன்

    ReplyDelete
  4. படங்களை வேகமா தேடி கண்டுபிடிச்சு பதிவு போடுங்க....

    ReplyDelete
  5. வாங்க குமார், தேடறது தான் கஷ்டம், நேரம் வேணுமே? :D

    ReplyDelete
  6. வாங்க செந்தில், படம் எல்லாரும் வச்சிருப்பாங்க. இது எல்லாம் யு.எஸ்.ஸில் பூங்காவிலே எடுத்த போட்டோக்கள். :))))))))))))

    ReplyDelete
  7. விஷ்ணு, வேகமாய் எல்லாம் தேட முடியாதுங்க. முடியலை! :(

    ReplyDelete