Friday, December 31, 2010

நீலவானம், பச்சைவயல், கறுப்பு சாலை!

 
Posted by Picasa
காரிலே போகும்போது தெரிந்த ஒரு காட்சியைப் படம் பிடிக்க நினைத்தால் காரின் வேகத்துக்கு என்னால் ஈடுகட்ட முடியலை. என்றாலும் இயன்றவரையில் நீலவானப் பின்னணியில் பச்சை வயல்களும், அதிலே கருநீலப் பின்னணியோடு கூடிய சாலையையும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான் எடுத்திருக்கேன்.

வாத்தியார் வந்து என்ன சொல்லப் போறாரோ? வலது ஓரத்திலே எதுவோ தெரியுது! எப்படி வந்ததுனு தெரியலை!

7 comments:

  1. வலது ஓரத்தில் ஸ்டியரிங் பிரதிபலிப்பு கண்ணாடியில் என எண்ணுகிறேன்.

    ஓடும் வண்டியில் நல்லா வந்திருக்கு. P&S-கு இது நல்ல முயற்சி.

    கடந்த வார கார் பயணத்தில் வண்டி 135 kmph வரை போய்க் கொண்டு இருக்கையில் ஷட்டர் ஸ்பீட் 1/800 வைத்து எடுத்தேன். மலைகள் தென்னைகள் மேகக் கூட்டம் என நல்ல சில காட்சிகள் கிடைத்தன. அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்:)!

    ReplyDelete
  2. வாங்க ரா.ல. இதான் எக்பெர்டோரியல் டச்ங்கறது. நானும் ஸ்டீரிங்னு நினைச்சேன், ஆனால் பின்னாடி வந்ததோனு தோணிச்சு. ம்ம்ம்ம்??? உங்களை மாதிரி எடுக்க எத்தனை ஜென்மம் எடுக்கணுமோ? :)))) உங்க புகைப்படக்கலை மிகச் சிறிய வயசிலேயே ஆரம்பிச்சிருக்கு உங்களுக்கு. எனக்கு அப்படி எல்லாம் ஆரம்பிக்கலை. இப்போத் தான்! பொண்ணு நல்லா எடுப்பா! தென்னையும் மேகமும் இன்னும் வரலை. மேகம் தானே! பங்களூரில் இருந்து வர நேரம் எடுத்துக்குதே! :)))))

    ReplyDelete
  3. ஓடும் வண்டியில் நல்லா வந்திருக்கு. P&S-கு இது நல்ல முயற்சி. //

    ஊக்கமளிக்கும் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கார்ல தானே போறிங்க. காரை நிறுத்தச்சொல்லி இறங்கி ஒழுங்கா எடுங்க!
    அப்புறம் என்ன? வலது இடது பிரச்சினை? ரெண்டு பேருக்கும்??

    ReplyDelete
  5. ரா.ல புகைப்படங்களை எனக்கும் அனுப்ப முடியுமா?

    ReplyDelete
  6. வாங்க திவா, நல்லவேளை பிழைச்சேன்! :))) காரை நிறுத்தச் சொல்லி எடுத்திருக்கலாம்தான், ஆனால் ஓடற காரிலே எடுத்தேன்னு பெருமையாச் சொல்லிக்க முடியுமானு யோசிச்சேன், அதான்! :))))))))))

    ReplyDelete
  7. @ திவா,

    அனுப்புகிறேன்:)! ஹைவேஸ்ல அப்படி நிறுத்தி நிறுத்தி எடுத்துக்கிட்டு இருந்தா நேரத்துக்கு ஊர் வந்து சேர முடியாதே:)?!

    நீங்கள் முன்னர் எங்கோ சென்றிருக்கையில் பொறுமையாய் இறங்கி எடுத்த காவல்தெய்வம் படங்கள் நினைவுக்கு வருகின்றன:)!

    ReplyDelete