Thursday, July 14, 2011

மணப்பாறை மாடு கட்டி

 
Posted by Picasa
மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி, வயக்காட்டை உழுது நட்டுட்டு இருந்தாங்களா, காமிரா பொட்டியிலே மாட்டிக்கிட்டதா? நினைவில்லை, சரினு செல்லினேன். கொஞ்சம் சரியா வரலை. அப்புறமா நகாசு வேலையும் பண்ணிப்பார்க்கிறேன். முதல்லே ஒரிஜினல் எப்படினு சொல்லணும் இல்ல?? அதான்.

6 comments:

  1. களை எடுக்கும் உழவர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றனர். மாட்டைக் காணுமே! நகாசுவில் வருமோ ஒருவேளை:)?

    நல்ல காட்சி:)! நன்றி!

    ReplyDelete
  2. ரா.ல. நாத்து நட்டுட்டு இருந்தாங்க. களை எடுக்கலை; நான் உட்கார்ந்திருந்த ஜன்னலுக்கு எதிர்ப்பக்கமிருந்ததா? என்னாலே சரியா எடுக்க முடியலை!(ஒரு சமாளிப்புத் தான்! இல்லாட்டி மட்டும் சரியா எடுத்துடுவேனா என்ன?? ஆறுதல்!)

    ReplyDelete
  3. விளை நிலமெல்லாம் காணமப் போய் கொண்டிருக்கையில் பார்த்ததும் பரவசமாய் பதிந்திருப்பது தெரிகிறது. எதிர்பக்க சன்னலில் இருந்து எடுப்பது சிரமமே.

    ReplyDelete
  4. பார்த்ததும் பரவசமாய் பதிந்திருப்பது தெரிகிறது//

    இம்முறை நிறையவே வயல்வேலை செய்பவர்களைக்காண முடிந்தது. போன வருஷம் இதே மாதங்களில் கொஞ்சம் வறட்சி தான். அதோடு காவிரி ஆறு, கிளை நதிகள், பாசன வாய்க்கால்கள் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யப்படுகிறது. பல வருஷங்களாகிவிட்டன, இப்படிச் சுத்தம் செய்ததைப் பார்த்தே! :(

    ReplyDelete
  5. நல்ல விஷயங்கள். நடக்கட்டும்.

    ReplyDelete
  6. ஏரும இல்லை மாடும் இல்லை அனேகமா ட்றாக்டராத்தான் இருக்கும்!

    ReplyDelete