Tuesday, July 19, 2011

பிள்ளையார், பிள்ளையார்!

 
Posted by Picasa
எப்போவுமே அருமை நண்பர். நான் என்ன பேசினாலும், எப்போப் பேசினாலும்,என்ன பேசினாலும் கேட்டுப்பார். நேத்திக்கு ரா.ல. சங்கடஹரசதுர்த்திப் படம் போட்டிருந்தப்போ இவரைப் போடணும்னு நினைச்சேன். முடியலை. இன்னிக்குப் போட்டுட்டேன். திருப்பனந்தாள் தாமரைக் குளத்து நடுவிலே கோயில் கொண்டிருக்கார். இங்கேயும் கேதாரீஸ்வரர் கோயிலுக்கும் மாயவரம் வேதபாடசாலையில் இருந்து ஒரு பிரம்மசாரிப் பையர் வந்து பூஜை செய்கிறார். சனி, ஞாயிறு மாயவரம் போவாராம். இங்கேயே இருந்து சமைச்சுச் சாப்பிடறார் போல.நல்லா மந்திரங்கள் சொல்லி தீப ஆராதனை எடுத்து விபூதிப் பிரசாதம் கொடுத்தார். கேதாரீஸ்வரர் கோயிலைப் படம் எடுக்க அநுமதிக்கலை. இங்கே எடுத்துக்கோனு சொன்னாங்க.

8 comments:

  1. பிள்ளையாரைப் பார்த்துக்க அந்தப் பிள்ளை

    வருவது ,அதோட பூர்வ ஜன்ம புண்ணியமா இருக்கும்

    குளத்துக்கு நடுவில இருக்காரா. இப்படியெல்லாம் நான் பார்த்ததே இல்லை.

    ReplyDelete
  2. குளம் நடுவே கோவில் கொண்ட ஆனைமுகத்தார் அழகாய் இருக்கிறார்.

    ReplyDelete
  3. வாங்க வல்லி, அபூர்வமான வருகைக்கு முதலில் நன்றி. :))))

    இது சென்னையிலே இருந்து கும்பகோணம் போற வழியிலே வரும் ஊர். காசி மடத்துக்குப்போய்ப்பார்க்கணும்னே போயிட்டு வந்தோம். இன்னும் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் எல்லாமும் போகணும், ஆண்டவன் மனசு வைக்கணும்.

    ReplyDelete
  4. நன்றி ரா.ல. ஊக்கமூட்டும் சொற்களுக்கு நன்றி..

    ReplyDelete
  5. ஆனைமுகத்தான்.. ஐந்துகரத்தானின் தரிசனம் கிடைச்சதும் எங்க புண்ணியம்தான் :-)

    ReplyDelete
  6. வாங்க அமைதி, தேடிப் பிடிச்சு வந்திருக்கீங்க போல! வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. மண்டபத்துல முன்னேயே பாத்த நினைவு! :P

    ReplyDelete
  8. @Thiva, heheheheஅப்போக் குளத்தோடயும் ஆனைக்குட்டியோடயும் போட்டேன். இப்போத் தனியாப் பிள்ளையார் மட்டும்!:P
    க.வி.எ.வி.பா???

    ReplyDelete