Sunday, August 21, 2011

ஏழை கண்ணீரைத் துடைக்கக் கண்ணன் வந்தான்!

 கண்ணன் தெரியறாப்போல் எடுக்கணும்னு பார்த்தேன். உட்கார்ந்து தான் எடுக்கணும்போல! இன்னிக்கு முடியலை! :( இது போதும்னு விட்டுட்டேன்.
 இந்த வருஷம் கண்ணனுக்கு நோ திரட்டுப்பால், அப்பம் நோ. எல்லா பக்ஷணமும் கொஞ்சம் தான் பண்ணி இருக்கேன்.
 இந்த ரெண்டு படத்திலேயும் கொஞ்சம் கை நடுங்கிடுச்சு. காலையிலே தண்ணீர் இறைச்சது; அப்புறம் ரெஸ்டே எடுத்துக்கலையா! அதான் தலை சுத்தல்; சமாளிச்சுக் கொண்டேன்.
Posted by Picasa
பாயசம், வடை, முறுக்கு, உப்புச் சீடை, வெல்லச் சீடை, சீப்பி, வெண்ணைச் சீடை, கோலோடை, தட்டை, பால், தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், பழங்கள் கண்ணனுக்குக் காட்டியாச்சு. இன்னமும் நாங்க எதுவும் சாப்பிடலை . ஓய்ஞ்சு போச்சு உடம்பும், மனமும். நாளைக்குச் சாப்பிட்டுக்கலாம். யாருக்கும் கொடுக்கவும் முடியாது இந்த வருஷம், வெளியே போக முடியாமல் சாலை ரொம்பவே மோசம். கால் வைச்சால் உள்ளே போகிறது. செருப்புப் போடாமல் போக முடியாது ரெண்டு பேருக்குமே! இந்த வருஷம் கண்ணன் இஷ்டம் இப்படி போலும்!

19 comments:

  1. நல்லா இருக்கு :)

    ReplyDelete
  2. எது?? பாயசம்?? வடை?? சீடை, முறுக்கு வகைகள்?? எது நல்லா இருந்தது? :))))))

    ReplyDelete
  3. யாருக்கும் கொடுக்கவும் முடியாது இந்த வருஷம், வெளியே போக முடியாமல் சாலை ரொம்பவே மோசம். கால் வைச்சால் உள்ளே போகிறது. செருப்புப் போடாமல் போக முடியாது ரெண்டு பேருக்குமே! சற்று வருத்தமான செய்தி.

    படங்களும், கிருஷ்ணர் பாதமும் அருமை

    ReplyDelete
  4. மம்ம்ம்ம்ம் மம்ம்ம்ம் மம்ம் மம் மம்... நன்னாக்கு!

    ReplyDelete
  5. வாங்க ராம்ஜி யாஹூ, தொடர் மழையால் எல்லாச் சாலைகளும் மோசமான நிலையில் இருக்கின்றன. எங்க வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் கால் புதைமண்ணில்போற மாதிரி உள்ளே போய், பாவம்! :(

    ReplyDelete
  6. கிருஷ்ணர் பாதம் குட்டிக் குட்டியாய் இருந்தால் தான் எனக்குப் பிடிக்கும். அதான் பிறந்த குழந்தைப் பாதம் அளவுக்கே வைப்பேன் எப்போவுமே! :))))))

    ReplyDelete
  7. திவா, என்ன சாப்பிட்டீங்க?? எது நல்லா இருக்கு??

    ReplyDelete
  8. வாங்க கோபி, தேடிப் பிடிச்சு வந்து ரசிச்சதுக்கு நன்னி ஹை.

    ReplyDelete
  9. திராச சார், ஒண்ணும் கிடையாது, போங்க! :P

    ReplyDelete
  10. What is koalodai and cheeppi? Wow!! Super woman !!

    ReplyDelete
  11. கோலோடைனால் முறுக்கு மாவையே கொஞ்சம் மோதிரம் மாதிரிப் பண்ணி எண்ணெயிலே போடறது. சீப்பி என்பது குழந்தை வாயில் வைத்துச் சப்பிச் சாப்பிடறாப்போல் நீளமாய் அந்தக் காலத்துப் பால் குச்சி போல் இருக்கும். :)))))

    ReplyDelete
  12. Super woman //

    நீங்க வேறே! :))))

    ReplyDelete
  13. கீதாம்மா,

    இது நீங்க தானா ? சீப்பி எப்ப‍டி செய்யணும்னு கொஞ்சம் சொல்லுங்களேன், இந்த வருட கோகுலாஷ்டமிக்கு முன்னாடி சொல்லுங்க, வீட்ல குட்டிப்பாப்பா இருக்கு, செஞ்சி கொடுக்க‍ணும்...

    ReplyDelete
  14. பொன்ஸக்கா, நானே தான், உங்க பின்னூட்டத்தைப் பார்த்துட்டு எனக்கு மயக்கமே வந்துடுச்சு! :P:P:P:P இணையத்துக்குக் கூட வரீங்களானு தான், வந்தாலும் என்னோட பதிவுக்கும் வரீங்களேனு தான்! :))))) இன்னிக்கு மத்தியானமா சீப்பி செய்முறை போடறேன். அதுசரி, பாப்பா ஆணா, பெண்ணா? முதல்லே என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். பூரண ஆரோக்கியத்தோடும் மனமகிழ்வோடும் நீங்களும், உங்கள் குடும்பமும் வாழ்க்கை நடத்தப் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  15. கீதாக்கா, இணையத்துக்கு தினசரி வரேனே! இப்ப‍ல்லாம், பதிவு படிக்கிறது, எழுதுறத விட, சமையல் குறிப்பு தேடத் தான் நிறைய வரேன் :-)

    பையன் - ஏழு மாதம் ஆச்சு.. மெல்ல‍ நீந்த ஆரம்பிச்சிருக்கான்.. பல்லு இன்னும் வரலை - இன்னிக்கோ நாளைக்கோன்னு நற நறன்னு எதையாவது கடிச்சிகிட்டே இருக்கான்! அதான்..

    ஆசிர்வாதம் பண்ண‍துக்கு ரொம்ப தாங்க்ஸ், நீங்க US வந்தா இந்தப் பக்க‍ மெல்லாம் வர்றது இல்லை போலிருக்கு! East coast-ஓட போயிடாம, அடுத்த‍ முறை எங்க வீட்டுப் பக்க‍மும் (san jose) வந்துட்டு குட்டிப்பையனை நேரில் பார்த்து ஆசிர்வாதம் பண்ணிட்டு போலாமே?!

    ReplyDelete
  16. இன்னிக்கு மத்தியானமா சீப்பி செய்முறை போடறேன் - என்னைக்கு மத்தியானம்? நானும் தேடிக் களைத்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அது இதிலே வந்திருக்காது நெல்லை. சாப்பிடலாம் வாங்க பதிவிலே போட்டேன். பொன்ஸக்காவும் பார்த்துட்டாங்க. இப்போல்லாம் தொடர்பே இல்லை. :(

      Delete