புதுசா விருந்தாளி வந்திருக்கார்னு ஒரு வாரம் முன்னாடியே தெரிஞ்சது. புது ஆள்னா உள்ளே விடமாட்டாங்க போல! :D ஒரே கூச்சல், குழப்பம். என்னனு பார்க்கப் போனால் எல்லாம் கப், சிப் காராவடை, காலணாவுக்கு ஓசி வடைனு அமைதி! அதிலும் இந்தத் தேன்சிட்டுங்க இருக்கே, ஜன்னல் வழியாப் பார்த்தால் இத்தனூண்டு இருந்துண்டு ஒரே கூச்சல், கூப்பாடு, அதட்டல்! மெல்ல மெல்லப் போனால் எப்படித் தான் தெரியுமோ~ எல்லாம் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்கே எல்லாமும் இப்போ மஞ்சக் கலரில் தான் வருதுங்க. பச்சைக் குருவியைக் கொஞ்ச நாளாக் காணோம்.
மேலே உள்ள விருந்தாளி நம்ம மீன் கொத்தனார் தான். இவர் ஒண்ணும் புதுசு இல்லை. நல்லாக் கிணத்துக்குள்ளே டைவ் அடிப்பார். இந்த வருஷம் தண்ணீர் சீக்கிரம் வந்துடுச்சா, ஏதானும் கிடைக்குமானு பார்க்க வந்திருக்கார் போல. இதுங்களோ சாகபட்சிணிங்க. நம்ம மீன் கொத்தனாரோ மீன் தான் சாப்பிடுவார். அப்புறமும் எதுக்குச் சண்டை! அதான் புரியலை! எல்லாமும் சேர்ந்து ஒத்துமையாப் பாடி ஆடலாம் இல்லை! அதை விட்டுட்டு,
எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்.
நான் வாழ யார் பாடுவார்,
என் பாடல் நான் பாடப்பலர் ஆடுவார்,
இனி என்னோடு யார் ஆடுவார்!
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்!
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
அப்படினு சிவாஜி ஸ்டைல்லே பாடிக்கும் போல! அவ்வளவு சத்தம்! :))))))))))
மேலே உள்ள படம் க்ராப்பிங் பண்ணறதுக்கு முன்னாடி. கீழே உள்ளது க்ராப்பிங் செய்தது. எப்போதும் போல் என் சாய்ஸ் ஒரிஜினலுக்குத் தான். என்ன கஷ்டம்னா, நான் படம் பிடிக்கப்போறது தெரிஞ்சு பின்னாடி வீட்டுக் கொடிக்குப் போய் உட்கார்ந்துடுச்சு, சரி, தொந்திரவு செய்ய வேண்டாம்னு அவங்க வீட்டுக் கொடியிலே உட்கார்ந்திருக்கிறச்சேயே எடுத்தேன். அதான் கொஞ்சம் பிடிக்கலை! :(
மூக்கோட ப்ரவுன் நிறம் எண்ணெய் போட்டாப்போல் பள பளா!