Saturday, August 3, 2013

பை, பை, பை, பை, பைகள் பற்றிய கதை தொடர்ச்சி இங்கே


இது ரொம்பப் பிடிச்சு வாங்கிண்டேன். ஓரிரு முறைதான் எடுத்துப்போனேன். கல்யாணம் ஆகும்போது கைப்பை எல்லாம் கிடையாது. என்னோட சித்தி ஒரு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார்.  அதைத் தான் வைச்சிருந்தேன். கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைக்கையில் குடித்தன சாமான்கள் வாங்க ரங்கநாதன் தெரு ரத்னா ஸ்டோர்ஸ் போனோம். அங்கிருந்து திரும்பும் வழியில் ஒரு கடையில் விதவிதமான பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.  அதில் ஒரு பை என்னைக் கவர்ந்தது.  கூட வந்த அம்மாவிடம் சொல்ல, அம்மா வா, வாங்கித் தரேன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போய் வாங்கித் தந்தார். பதினைந்து ரூபாய் சொன்ன பையை எட்டு ரூபாய்னு பேரம் பேசி வாங்கினோம். பை சதுரமாக இருக்கும் என்பதோடு பக்கவாட்டில் குடை வைக்கவும் ஒரு சின்னப் பை இணைத்திருந்தது.  ஆகவே ரொம்பப் பிடிச்சிருந்தது.  வாங்கிட்டேன். அப்போ என்னோட சித்தியும், என் கணவரும், மாமியாரும் வேறே ஏதோ வாங்கிட்டிருந்தாங்க. அவங்களைக் கேட்காமல் இந்தப் பையை வாங்கினேன்னதும் என் கணவருக்கும், சித்திக்கும் கோபம்.  பை நல்லாவே இல்லைனு சொல்ல எனக்கு இன்னமும் அதிகம் பிடிச்சது.  அது  வந்த சில நாட்களிலேயே தினம் தினம்  வெளியே எடுத்துப் போகும்படியாக எனக்கு வேலையும் கிடைச்சது.  அதிலேயே டிபன் டப்பாவையும் போட்டுக்கலாம். தாங்கும். திரும்பி வீட்டுக்கு வரச்சே கிடைக்கும் நல்ல காய்களையும் வாங்கி அந்தப் பையில் போட்டுக் கொண்டு வருவேன். நல்ல உழைப்பு அந்தப் பைக்கு. 

பர்ஸ் போன்ற இந்தப் பை துணியால் ஆனது.  சாடின் துணி. அநேகமாக இந்த நிறத்திலேயே கிடைக்குதுனு நினைக்கிறேன்.  வேறே நிறத்தில் பார்க்கலை.  ஒரு கல்யாணத்தில் வைச்சுக் கொடுத்தாங்க. இதே போல் இரண்டு இருந்தது.  ஒன்றை மாமியாரிடம் கொடுத்தேன். இன்னொன்று என்னிடம் இருக்கு. உள்ளே நிறைய அறைகள்.  மொத்தம் ஏழு அறைகள்.

எங்க பையர் வாங்கிக் கொடுத்த பாக்பேக். மடிக்கணினியை வைத்து எடுத்துவர வேண்டி இதை வாங்கினார்.  நான் சதுரமான பையாகக் கேட்டேன்.  பையர் இதைத் தோளில் மாட்டிக்கலாம்.  உன்னால் தூக்க முடியலைனால் அப்பா தூக்கலாம்.  கையில் எடுத்துப் போகும் பை கை வலிக்கும், வேண்டாம்னு சொல்லிட்டார். 

மஞ்சள் பை மாதிரித் தெரிந்தாலும் இது அந்தக் காலத்தின் மஞ்சள்பை அல்ல.  இப்போது தராங்களே ஒரு துணிப்பை கல்யாணங்களிலே அப்படிப் பட்டது.  முன்பெல்லாம் துணிக்கடைகளிலும் சரி, சாமான்கள் வாங்கினாலும் சரி துணிப்பையே கொடுப்பாங்க.  பெரும்பாலும் மஞ்சள் பையாகவே இருக்கும். அந்த மஞ்சள் பை பலருக்கும் ஒரு அடையாளமாகவும் இருந்தது. அதிலேயே பணத்தைக் கட்டுக்கட்டாகப் போட்டு எடுத்துவராப் போல எல்லாம் தொடர்களில் காட்டறாங்க. ஏன் கொள்ளை அடிக்கமாட்டாங்கனு நினைச்சுப்பேன்.


அதே மாதிரிப் பை தான்.  ஆனால் கொஞ்சம் பழுப்புக் கலந்த வெள்ளை நிறத்தில் சிவப்பு எழுத்துக்களோடு கூடியது.  இதுவும் கல்யாணப் பைதான். இப்படியாகப் பைகளின் புராணம் நிறைவு பெற்றது.  இன்னமும் பல பைகள் இருக்கின்றன.  சுருக்குப் பைகளும் அவற்றில் ஒன்று. சில சுருக்குப் பைகளும் இருக்கின்றன.  அதில் ஒருத்தர் ஒரு கல்யாணத்தில் வெல்வெட்டில் சுருக்குப் பை ஒன்று கொடுக்க பொண்ணு அதை எடுத்துட்டுப் போயிட்டா! :))))

Thursday, March 21, 2013

மயிலே, மயிலேன்னா இறகு போடுமா?


திருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன்.  வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க்க! :))))))




Wednesday, January 30, 2013

நண்பருக்கு நல்வரவுடன் தொடக்கம்.

இப்போ சமீபத்திய ஊர் சுற்றலில் எடுத்த படம் இது.  எங்கே என்பதைப் பின்னர் பகிர்ந்துக்கறேன். எங்கே போனாலும் நம்ம நண்பர் மாட்டினால் அவரைப் படம் எடுக்காமல் விடறதில்லை.

Friday, January 25, 2013

நானொரு வாயில்லாப்பூச்சிங்க!

போன வாரத்தில் ஓர் நாள் பால்கனியைச் சுத்தம் செய்கையில் பச்சையாய்ப் ப்ளாஸ்டிக் கவரின் நுனி மாதிரி ஏதோ இருக்கவே அதைத் தள்ளி விட்டேன். அதுவோ பறக்க ஆரம்பித்தது.  கவரும் பறக்கும் தான். ஹிஹி, ஆனால் இதுக்குக் கண்ணு, மூக்கு இருக்கவே அது திரும்ப உட்காரும் வரை பொறுத்திருந்து விட்டுக் காமிராவிலே பிடிச்சேன்.  அதான் மேலே.


படம் எடுக்கறேனு தெரிஞ்சதும் மறுபடி பறக்க ஆயத்தம்! :)

Saturday, January 5, 2013

தென்னை மரத்தோப்பினிலே




வீட்டருகே இருக்கும் தென்னைமரங்களின் பின்னணியில் காவிரியில் ஓடும் சிறிதளவு நீர்.

Sunday, December 9, 2012

இனிக்கும் இனிய காலையும், மயக்கும் மாலைப் பொழுதும்!


ஸ்ரீரங்கம் வீட்டில் காலை நடைப்பயிற்சிக்குச் செல்கையில் உதயசூரியனின் பொன்னிறக் கிரணங்களைப் பார்க்கையில் தினம் படம் எடுக்கச் சொல்லும்.  ஒரு நாள் முயன்றது இது.





இது ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் கருமேகங்கள் சூழக் காட்சி அளித்த வானம். கடலில் நீந்தும் நீர் வாழ் ஜந்துக்களைப் போன்ற தோற்றம் கிடைக்க க்ளிக்கினேன். 

Sunday, December 2, 2012

கார்த்திகை தீபம் எங்க குடியிருப்பில்!


எங்க குடியிருப்பில் எதிர் வீடுகளில் கலர்க்கோலங்கள் போட்டு தீபங்களை வைத்திருந்த காட்சி.