Friday, May 25, 2012
Wednesday, May 9, 2012
காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி
கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Monday, April 9, 2012
இங்கேயும் பாதை தெரியுது பாருங்க!
பாதை தெரியுது பார்!
இந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.
போட்டிக்கெல்லாம் அனுப்பும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்க்க. சென்ற வருடம் செப்டம்பரில் மதுரை போகையில் ரயிலில் உட்கார்ந்த வண்ணம் எடுத்த படங்கள் இவை.
Thursday, March 29, 2012
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் நண்பர்
இவர் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன்லே இருக்கார். என் கணவர் சொல்றதைப் பார்த்தால் ரொம்பவே வயசானவர் போல இருக்கு. அந்த அதிகாலையில் குருக்கள் வந்து தன்னந்தனியாக அவருக்கு எல்லா சிசுருஷைகளும் செய்து பாலபிஷேஹமும் செய்துவிட்டு அலங்காரமும் செய்ததைப் பார்த்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.முழு அலங்காரத்தோடு கீழே பார்க்கலாம்.Sunday, March 25, 2012
பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்
கை கோர்த்திருக்கும் இருவரும்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?
இனி ஒவ்வொரு பூவாக வரும்
சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??
Friday, March 23, 2012
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ!
Subscribe to:
Comments (Atom)