Thursday, July 5, 2012

நிலா நிலா ஓடி வா, நில்லாமலே ஓடி வா!

முந்தாநாள் பெளர்ணமி அன்னிக்கு நிலாவைத் தான் என் கையிலே பிடிச்சேன்னு பாடிட்டே படம் எடுத்தேன்.  முதல்லே வெளிச்சம் இருக்கிறச்சே ரெண்டு, மூணு எடுத்துட்டு, அதிலே கொஞ்சம் சுமாரானதைப் பகிர்ந்திருக்கேன்.


அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு.  அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன்.  அது கீழே.


Wednesday, May 9, 2012

காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி


கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Posted by Picasa

Monday, April 9, 2012

இங்கேயும் பாதை தெரியுது பாருங்க!

சான் அண்டானியோவின் ரிவர் வாக்கில் எடுத்த படம். வலப்பக்கம் படகு ஒன்று போய்க் கொண்டிருக்கையில் எடுத்தது.
இதுவும் சான் அண்டானியோவில் தான் ஸீ வேர்ல்டில் வாட்டர் ரைடில் எடுத்தது. வாட்டர் ரைடில் போகும்போது காமிராவெல்லாம் கொண்டு போக முடியாது. ஆகையால் வேறொருத்தர் ரைட் போகையில் எடுத்தது. பாதை தண்ணீரிலும் தெரியலாமே! :)))))
ஸீ வேர்ல்டுக்குள்ளாக நுழைந்து செல்லும் பாதை. சாதாரணமாய்க் கூட்டமாய்க் காணப்படும். அப்போ என்னமோ யாருமே இல்லையா? உடனே க்ளிக்கினேன். பையர் யாரும் இல்லை; உடனே எடுனு சொன்னார்.
இது படகில் இருந்து எடுத்தது. மேலே உள்ள பாலத்தைப் படகு கடக்கையில் எடுத்த படம். இதுவும் ரிவர் வாக்கில் எடுத்தது. நாங்க படகிலே சென்றபோது எடுத்த படம்.

பாதை தெரியுது பார்!

 
Posted by Picasa

இந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.
Posted by Picasa
போட்டிக்கெல்லாம் அனுப்பும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்க்க. சென்ற வருடம் செப்டம்பரில் மதுரை போகையில் ரயிலில் உட்கார்ந்த வண்ணம் எடுத்த படங்கள் இவை.

Thursday, March 29, 2012

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் நண்பர்

Posted by Picasa இவர் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன்லே இருக்கார். என் கணவர் சொல்றதைப் பார்த்தால் ரொம்பவே வயசானவர் போல இருக்கு. அந்த அதிகாலையில் குருக்கள் வந்து தன்னந்தனியாக அவருக்கு எல்லா சிசுருஷைகளும் செய்து பாலபிஷேஹமும் செய்துவிட்டு அலங்காரமும் செய்ததைப் பார்த்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.முழு அலங்காரத்தோடு கீழே பார்க்கலாம்.

Posted by Picasa

Sunday, March 25, 2012

பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!

ஹூஸ்டன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பூச்செடிகள் வசந்த கால ஆரம்பத்திலே பூத்திருந்த சில பூக்களுடன். இன்னும் முழுதாகக் குளிர் போய் இலைகளில் துளிர்களோ, அல்லது சின்னஞ்சிறு செடிகளில் பூக்களோ பூக்க ஆரம்பிக்கவில்லை.



Posted by Picasa
எனினும் ஒரு சில செடிகள் அவசரக் குடுக்கையாகப் பூத்திருந்தன. அவற்றில் இரண்டு. சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்

இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்

கை கோர்த்திருக்கும் இருவரும்

என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??