Friday, April 30, 2010

நாங்க தங்கின வீடு!

இதோ தெரியுதே, இதான் கொடைக்கானல் மலை. இரவிலே நல்ல மின்விளக்கு வெளிச்சங்களோட தெரியும். மலை அடிவாரத்திலே தான் எங்க ஊர் இருக்கு. பக்கத்திலே பெரியகுளத்திலே இருந்து நடந்தே மேலே ஏறலாம். அங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் ரொம்ப பிரசித்தி. அங்கே கொடைக்கானல் மலையிலிருந்து கீழே வரும் மஞ்சளாறு தண்ணி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும், தண்ணீரே குடிச்சாப்போதும்கற மாதிரி சுவையான சுவை. மஞ்சளாறு இறங்கி வர இடத்திலே தான் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் கோயில், மூங்கிலணை காமாக்ஷினும் சொல்லுவாங்க. கதவுக்குத் தான் பூஜை, வழிபாடுகள், மாலை, மரியாதை, அர்ச்சனைகள், தீபாராதனை எல்லாம். மூலஸ்தானத்தை இது வரை திறந்து பார்த்தவங்க இல்லை. அங்கே கூரை மாத்தறதுக்குக் குறிப்பிட்ட நாயக்கர் வம்சத்தாரின் கனவில் அம்மன் வந்து சொன்னதும், கண்ணைக் கட்டிக்கொண்டு ஏணி வழியா மேலே ஏறிக் கூரை மாத்துவாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை அப்படிக்கூரை மாத்தினாங்க. அப்புறமா மாத்தினதா நாங்க போனப்போ பூசாரிகள் சொன்னாங்க. இங்கே அர்ச்சனை, ஆராதனை வழிபாடுகள் செய்யறவங்க கர்நாடகாவின் போத்திகள் பரம்பரையைச் சேர்ந்தவங்கனு சொல்றாங்க. கோயிலைப் படம் எடுக்க முடியாது. அநுமதி இல்லை. அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.
என்னோட பெரியப்பா பையர் வீடு. கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார். இப்போ ஏதோ புஞ்சைக்காடு இருக்குனு சொல்றாங்க. அதை யாரோ குத்தகைக்கு எடுத்துட்டு ஒண்ணும் கொடுக்கிறதில்லைனும் கேள்வி. வீடு ஒண்ணு இருக்கு எதிர்ப்பக்கம். அதைப் படம் எடுத்தது, எங்கேனு காணோம், தேடிட்டு இருக்கேன். கறுபபா, இதோட பின்னூட்டத்தை யாருக்கானும் அனுப்பிட்டு என்னை எல்லாரும் திட்டப் போறாங்க! காப்பாத்துப்பா!

10 comments:

  1. //கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார்.//

    அப்படியா கதை? இதை மையமா வச்சு நான் ஏற்கனவே ஒரு கதை எழுதியிருக்கிறேன்:)!

    //அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.//

    தேடணுமா:(? ஏன் என்னாச்சு? கிடைக்கும் நல்லா தேடுங்க. பொற்சித்திரங்களை காட்டாம பேசிட்டு மட்டும் போனா ஒத்துக்க மாட்டோம், ஆமா:)!!

    ReplyDelete
  2. ;0அதானே. எனக்குப் பெரியப்பா பையர்
    வீட்டு உட்புறமெல்லாம் பார்க்கணும்:)

    கொடைக்கானல் மலை நல்லா இருக்கு. மாவடு ஏதாவது கிடைக்குமா பெரிய குளத்திலிருந்து

    ReplyDelete
  3. கதையா?? ரா.ல. சுட்டி கொடுங்க, படிச்சுப் பார்க்கலாம். வரவுக்கும், படத்துக்குப் போட்ட மேக்கப்புக்கும் நன்றிங்க. அதை அடுத்து வெளியிடறேன்.

    ReplyDelete
  4. வாங்க வல்லி, மாவடு பெரியகுளம், சுருளி வடுவுக்கு ஈடு, இணை இல்லைதான், எங்கே?? இப்போல்லாம் கனவு தான் காணமுடியும்! மதுரையில் இருந்தால் அழகர்கோயில் வடுவானும் வரும். மலைவடு! ஆஹா! அந்த நாளும் வந்திடாதோனு சொல்ல வைக்குது!

    ReplyDelete
  5. ஏதோ மாவடு வாசனை வருதேன்னு வந்தேன் இந்தப் பக்கம்... :)....கருப்புத்தான் வந்து சொல்லித்து இங்கே மாவடு போடறதா....2 பாட்டில் மலைவடு பார்சேஏஏஏஏஏஏஏஏஏல்.

    ReplyDelete
  6. சரியாப் போச்சு மெளலி, இன்னமும் உங்களுக்குக் கமெண்ட் வருதா??? நிச்சயமாக் கறுப்போட வேலைதான் இது! நான் நல்லாப்பார்த்துட்டேன், எங்கேயும் எந்தத் தப்பும் இல்லை!

    ReplyDelete
  7. அந்தக் கதையின் லிங்கைத் தேடி வந்து தொட்டி மீனை எட்டிப் பார்த்துப் போனீங்க என்பது மடல் மூலமாக விளங்கியது:)!

    இன்றைக்குதான் தினமணிக் கதிரில் அக்கதை வெளியாகியுள்ளது. வலைப்பூவிலே இனிமேல்தான் பதிவேன். ஆனால் தினமணி இணைய தளத்திலும் படிக்கலாம்: 'வயலோடு உறவாடி’ . நீங்கள் கேட்டதால்   உங்களுக்குதான் கொடுக்கிறேன் முதன் முதலா லிங்கை:))!  

    ReplyDelete
  8. உள்ளதிலேயே நல்ல தண்ணி மஞ்சுளாத்து தண்ணியும் தாமிரபரணி தண்ணியும் தான். ஐயோ இந்த பக்கம் பாத்ததே இல்லையே !! கொடைக்கானல் மலை என்ன , சாயந்திரம் மலை மேல மூட்டம் போடடு சின்ன சின்ன அகல் மாதிரி மினுகிடற தீ வரிசை என்ன, கும்பக்கரை என்ன, வழில குரங்கு பட்டாளம் என்ன வழி முழுக்க கதிர் அறுத்து போட்டுஇருக்கறது என்ன, புல்லு கட்டை சுமந்து கொண்டு shape ஆன shape ஆ rhythmic ஆ போகற பெண்கள் கூட்டம் என்ன அந்த வயக்காட்டு கம்பு கூழோட மணம் என்ன, ராக்கம்மாக்களின் பாட்டு என்ன வல்லியம்மா கேட்டிருக்கும் பெரியகுளம் மாவடு (மஞ்சனாத்தி) என்ன, சிறுமலை பழம் என்ன, பண்ணக்காட்டு காத்து என்ன திண்டுக்கல் மலக்கோட்டை என்ன,தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, வடுகுபட்டி வத்தலக்குண்டு மேல், மன்னாடி மங்கலம்.... .....ஹ்ம்..
    எல்லாம் புராணமாச்சே!! மதுரையே என் அருமை மண்ணே என்று பார்ப்பேன்

    ReplyDelete
  9. வாங்க ரா.ல. கதையைப் படிச்சேன், நல்லா இருக்கு, நன்றிங்க.

    ReplyDelete
  10. வாங்க ஜெயஸ்ரீ, இன்னிக்கும் நீங்க சொல்லும் எல்லாவற்றையும் இங்கே பார்க்கமுடியுது. கிராமத்து ஜனங்கள் உழைப்புக்கும் குறைவில்லை என்பதையும் கண்கூடாய்க் கண்டோம். கோயில்களில் ஊர்மக்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொண்டு எல்லா விசேஷங்களையும் செய்கின்றனர். மனதுக்கே கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும் இடம் இது. கோயிலும் ஆயிரம் வருஷத்துக்கும் மேலானாலும் சமீபத்தில் கும்பாபிஷேஹமும் கண்டது.

    ReplyDelete