இந்த வாழைப்பூவைப் பார்த்தீங்களா?? இது வாழை மரத்தின் கன்று என நினைச்சு இலைகளை எல்லாம் வெட்டி விட்டதும் ஏற்கெனவே வந்த கண்ணாடி இலையில் இருந்த பூ. மினி வாழைப் பூ. மிக மிகச் சின்னது. ஒரு சாண் கூட இல்லை. கிட்ட வச்சுப் படம் எடுத்தேன். படம் எடுத்தும், காய்கள் வந்தும் ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு. போட முடியலை. சின்னக் காய்கள். குழந்தையின் விரல்கள் போல. மரத்தின் இலைகளைச் சீய்த்து விட்டும், விடாமல் தன்னுள்ளே இருந்த கருவை வெளிக்கொணர்ந்து விட்டது.
மிக மிகச் சிறிய இந்தப்பூவின் அளவையும், காய்களின் அளவையும் பார்க்கிறச்சே அவசரப் பட்டுத் தப்பாய் வெட்டிட்டாரோனு மனசு சங்கடப் பட்டது. இந்தப் பூவோ, காய்களோ பயன்படாது. இப்போ இந்த மரத்தையே வெட்டியாச்சு. இலைகளை வெட்டினதும் பூமியில் இருந்த இந்தக் கன்று அழுகிவிட்டதுனு நினைச்சு அடியோடு வெட்ட இருந்த வேளையில் பூவும், காயும் வந்து கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்தது. :(
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
பூத்ததைப் படமாக்கி மனசோடும் இருத்தி விட்டீர்கள்!
ReplyDeleteவாங்க ரா.ல. முதல் வரவுக்கும், இந்தப் பதிவின் முதல் போணிக்கும் நன்னிங்கோ! :D
ReplyDelete:-(
ReplyDeleteகொஞ்சம் சங்கடமாதான் இருக்கு!
வாங்க திவா, இந்தப் பக்கம் வந்ததுக்கு நன்றி. கண்ணாடி இலை விட்டிருக்கிறதைச் சரியாக் கவனிக்காம வெட்டி இருக்காங்க. என்ன செய்யலாம்?? :((((((((
ReplyDeleteஅடப்பாவமே! :(
ReplyDeleteபூக்கள் மலரட்டும் புதுமணம் வீசட்டும்
ReplyDeleteஎன்ன இது?? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கு! மெளலி, உங்களுக்குச் சொன்னது யாரு??
ReplyDeleteதிராச சார், நீங்க இங்கேயா??? மயக்கம் வரும் போல இருக்கு, தி.வா. மயக்க ஊசி போடாமலேயே! :P:P:P:P
ரா.ல. நல்லாத் தான் போணி பண்ணி இருக்கீங்க, நன்னிங்கோ! :)))))))))
நன்றி:)!
ReplyDelete