Monday, April 26, 2010

விட்டு விடு கறுப்பா!

என்னோட அப்பாவின் ஊரான மேல்மங்கலத்தில் வராஹ நதிக்கரையோரம் இருக்கும் படாளம்மன் கோயிலில் உள்ள கறுப்பண்ண சுவாமி. இவரைப் படம் எடுக்கணும்னு பையர் சொன்னதும் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்மாவே இருந்தது எனக்கு. அப்புறமா பூசாரி கிட்டே கேட்டோம். தாராளமா எடுக்கலாம்,அப்படினு உத்தரவு கொடுத்தார். படாளம்மனை மட்டும் எடுக்க முடியலை. அவளோட தர்பாரில் இவர் முக்கிய சேனாதிபதி! அபிஷேஹம் கிடையாது இவருக்கு. எங்க வீட்டுக் கல்யாணங்களில் முதல் பத்திரிகையை இவருக்குக் கொடுத்துடணும். இல்லாட்டிக் கோவிச்சுப்பார். அதுவும் பாக்கு, பழம் வைச்சுக் கொடுக்கணும். என் கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணா, தம்பி கல்யாணங்களிலே கொடுக்க முடியலைனு அம்மா கடைசி வரையிலே சொல்லிண்டே இருந்தா. இப்போ வருஷா வருஷம் போயிட்டு வராங்க அண்ணா, தம்பி குடும்பத்தோடு. எங்களுக்கு விசேஷப் பிரார்த்தனை இருந்ததால் நிறைவேற்றப் போனோம்.
படாளம்மன் கோயிலின் ஒரு பக்க நுழைவு வாயில். அந்தப் பக்கம் தெரியறது வராஹ நதி. நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் நுழைஞ்சுடும். இத்தனைக்கும் கோயிலில் இருந்து நதிக்குப் போகும் படித்துறையில் இருபது படிகளுக்கும் மேல் இருக்கு. மேல்படி அரை அடி அகலமே. கொஞ்சம் கால் வழுக்கினால் கீழே வராஹ நதிக்கரையோரம், புறாவே உந்தன் நினைவில்னு பாடிட்டுப் போகணும்! என்றாலும் அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இன்னமும் மாடுகளுக்குப் புல் வளர்க்க கிராமத்தில் நிலம் பொதுவில் தனியா ஒதுக்கி இருக்காங்க. அந்தப் பாலைச் சாப்பிட்டுப் பாருங்க! பசும்பால் தான் அந்தப் பக்கமெல்லாம். மாடெல்லாம் சின்னதாய் இருந்தாலும் அருமையான சுவையோடு கூடிய பாலை நிறையத் தரும்.

7 comments:

 1. அன்பு கீதா, பயமாகத்தான் காட்சி அளிக்கிறார்.
  பயப்படுத்தினால்தான் எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள் என்றோ. வராஹ நதி,(இதுக்கு முந்திய பதிவில்) பசுமையாக காட்சி கொடுக்கிறது. உங்க ஊருக்கெல்லாம் எப்பப் போவேனோ:)

  ReplyDelete
 2. வாங்க வல்லி, முதல்வரவு?? அதிசயமா இருக்கே இந்தப் பக்கத்தைத் தெரிஞ்சு வச்சுட்டு வந்தது?? நன்றிம்மா.

  ஆமாம் கறுப்புக்கு இன்னமும் அந்தப் பக்கமெல்லாம் கொஞ்சம் இல்லை நிறையவே பயம் தான். அவர் மேலே போட்டிருக்கும் ருமாலும் நிலைமாலையும் நாங்க வாங்கிட்டுப் போனது. நிலைமாலை பழநியில் ஆர்டர் கொடுத்து இரண்டு மணி நேரத்தில் கட்டிக் கொடுத்தது. எத்தனை அழகான மாலை தெரியுமா??அவர் உயரத்துக்கு ருமால் தான் கொஞ்சம் சின்னதாப் போச்சு! அதில் வருத்தம் தான்! பார்க்கலாம் இன்னொரு முறை போக முடியுமானு! :))))))) இன்னமும் எங்க அப்பாவுக்கு அக்ரஹாரத்தில் வீடு இருக்கு. அக்ரஹாரத்தில் 60க்கு மேல் சொந்தக்காரங்க குடும்பங்களும் உள்ளன. உள்ளே நுழைஞ்சாலே என் அப்பா பேரைச் சொல்லி, அவன் பொண்ணா நீனு கேட்பாங்கன்னா பார்த்துக்குங்க. சுத்தம்னா சுத்தம் அப்படி ஒரு சுத்தம் தெருக்களில் படுத்துப் புரளலாம்.

  ReplyDelete
 3. இவரைப் பற்றி முன்னர் ஒரு மெகா தொடர் வந்ததே. எல்லா காவல் தெய்வங்களைப் போலவும்தான் இவரும் பயமா தெரியறார்.

  வீட்டிலே மாடு வைத்துதான் எங்களுக்கெல்லாம் பால், தயிர், நெய் எல்லாம் ஒரு காலத்தில். இப்போ எங்கே? பால் பாக்கெட்தான். பசும்பாலை நினைவு படுத்தி விட்டது பதிவு.

  ReplyDelete
 4. வாங்க ரா.ல. அந்த விஷயத்தில் இப்போவும் நாங்க அன்னன்னிக்குக் கறந்த புதுப் பாலையே பயன்படுத்திட்டு வரோம். எப்படியோ கிடைச்சுடுது. வெண்ணெயும் சரி,மோரும் சரி, வீட்டில் கறந்த மாட்டுடையதே. கவர் பால் எப்போவோ அவசரத்துக்கு வாங்கறது, வேறு வழியில்லைனா. கடைந்ததும், பசுமோர் வாசனை வரும், பாருங்க, எலுமிச்சம்பழம் பிழிஞ்சு, உப்பு லேசாப் போட்டுக் குடிச்சா, ஆஹானு சொல்ல வைக்கும்

  ReplyDelete
 5. விடமாட்டேன்னு சொல்றாரு கருப்பர்...அதான் இந்த பதிவு பற்றியும் தெரிந்தது....:)

  ReplyDelete
 6. வாங்க மெளலி, இத்தனை நாட்களா/வருஷமா?? பதிவு போட்டுட்டு இருக்கேன், இப்போப் பாருங்க, கறுப்பைப் போட்டதும் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் வரீங்க! :))))))) நான் நல்லா செக் பண்ணியாச்சு இப்போவும். என்னனு புரியலை! கூகிளுக்குள் கறுப்பு புகுந்திருக்கோ???

  ReplyDelete
 7. அட நம்ப கருப்பாண்டி சாமி கருமுத்து சாமி.
  பாலா அது அமிர்தம். மாடு சோனி பாலு ஜெர்ஸி

  ReplyDelete