Thursday, April 22, 2010

வராஹ நதிக்கரையோரம்!

2007-ம் வருஷம் டிசம்பரில் ஆறுபடை வீடுகளுக்குப் போனோம். அப்போ என்னோட அப்பாவின் பூர்வீக ஊரான மேல்மங்கலம் கிராமத்துக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிப் போனோம். அங்கே இருந்த படாளம்மன் கோயில் வராஹ நதிக்கரையோரம் உள்ளது. கோயிலின் ஒரு வாசல் வழியாக நதியில் இறங்கும்படி இருக்கும். நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் வந்துடும். இது நாங்க முதல்லே போகறதுக்காகத் தொலைபேசியில் சொன்னப்போ கோயிலுக்குள்ளே வெள்ளம் இருக்கு வடியட்டும்னு சொன்னாங்க. வடிஞ்சு நாலு நாள் கழிச்சுப் போனோம். அப்போவும் நதியில் தண்ணீர் இருகரையும் தொட்டுக்கொண்டு போனது. இயற்கை என்னும் இளைய கன்னி கொஞ்சி விளையாடுவாள் அங்கே. மாடுகளுக்குப் பறிச்சுட்டுப் போற பசும்புல்லைப் பார்த்தாலே பாலின் சுவை நாக்கில் ஊறும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். கொடைக்கானல் சில கிலோமீட்டர்கள் தான்.

10 comments:

  1. அருமையான ஊரை விட்டுட்டு காட்டிலே போய் உக்காந்து இருக்கீங்களே!

    ReplyDelete
  2. எங்க ஊருப்பக்கமில்ல இது ?

    ReplyDelete
  3. வாங்க திவா, முதல் பின்னூட்டத்துக்கு நன்னிங்கோ. என்ன செய்யறது?? இது ரங்க்ஸோட ஊர் இல்லையே! :D

    ReplyDelete
  4. மெளலி, க்ர்ர்ர்ர்ர்ர், எங்க ஊர் மேல்மங்கலம் தாண்டித்தான் உங்க ஊருக்கே போகணுமாக்கும்! :P

    ReplyDelete
  5. படத்தை பெரிது செய்து பார்த்தேன்.

    //இயற்கை என்னும் இளைய கன்னி கொஞ்சி விளையாடுவாள் அங்கே.//

    ஆமாங்க, ரொம்ப சரி. அமைதியான சூழலும் மேலே அந்த ஒற்றைப் பறவையுமாய் படம் மிக அற்புதம்.

    ReplyDelete
  6. படம் பார்க்க வந்தேன் :) பாத்தாலே அமைதியா அழகா இருக்கு.

    அம்மா, ஒரு விஷயம் தெரியுமா? இந்த வலைப்பூவில் நான் பின்னூட்டவே இல்லைன்னாலும், எல்லா பின்னூட்டும் எனக்கு எப்படியோ வந்துடுது! இதெப்படி இருக்கு! நீங்க எதுவும் மாய மந்திரம் பண்ணி வச்சிருக்கீங்களா? இப்ப கூட ராமலக்ஷ்மியின் பின்னூட்டம் பார்த்துதான் வந்தேன் :)

    ReplyDelete
  7. வாங்க ரா.ல. அடிக்கடி வரும் உங்களைக் கூப்பிடாமல் மத்தவங்களைக் கூப்பிட்டுட்டு துரோகம் செய்துட்டு இருக்கு இந்தப் பதிவு! ரொம்ப நன்றிங்க, வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  8. வாங்க கவிநயா, அதை ஏன் கேட்கிறீங்க? இதுக்கு அடுத்த கறுப்பு தி.வா.வைப் போய்ப் பயமுறுத்திட்டு வந்திருக்கு, வல்லி கொடுத்த பின்னூட்டமெல்லாம் அவருக்குப் போயிருக்கு. ஏதோ கறுப்போட வேலைனு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க?? :))))))))

    பி.கு. தி.வா. சொன்னதுமே செட்டிங்ஸிலே போய் அலசி ஆராய்ச்சி பண்ணிட்டேன், பெர்மிஷன்ஸ் பக்கமும் போய்ப் பார்த்தாச்சு! கறுப்பு தான் பதில் சொல்லணும்! :))))))))

    ReplyDelete
  9. //இந்த வலைப்பூவில் நான் பின்னூட்டவே இல்லைன்னாலும், எல்லா பின்னூட்டும் எனக்கு எப்படியோ வந்துடுது! இதெப்படி இருக்கு! நீங்க எதுவும் மாய மந்திரம் பண்ணி வச்சிருக்கீங்களா? //

    கவிக்கா, தெரியாதா உங்களுக்கு?, கோவில்-கோவிலாப் போயி ஏதோ மாயம்-மந்திரம் போட்டு வச்சுருக்காங்க கீதாம்மா...அதான் இப்படி...எனக்கும் வருது. :)

    ReplyDelete
  10. @மெளலி, சரியாப் போச்சு போங்க, கட்டாயமா இது கறுப்போட வேலைதானோ?? :)))))))

    ReplyDelete