Saturday, March 19, 2011

அந்த நிலாவைத் தான் நான் கையிலே பிடிச்சேன்!

 
Posted by Picasa
இன்னிக்கு வர நிலாவைக் கையிலே பிடிக்கணும்னு மாடிக்குப் போனா பக்கத்துக் கட்டட வேலைக்குப்போட்டிருக்கும் மறைப்பு நிலாவையே காட்டலை! தெருவிலே இருந்து தான் தெரியும் போல! ஒரு நிலா பார்க்கக்கூட இவ்வளவு கஷ்டமானு மனசு நொந்து போச்சு. ஏற்கெனவே இருக்கிற வருத்தம் போறாதுனு இதுவேறேயானு நினைச்சுட்டுக் கொஞ்சூண்டு தெரிஞ்ச நிலாக்கீற்றைப் பிடிச்சேன். முடியலை. கீழே இறங்கிட்டேன். அப்புறமா ரங்க்ஸ் வந்து நிலாவை எடுத்தியானு கேட்டதும் தெரியலைனு சொன்னேன். வா, மாடிக்குனு கூப்பிட்டார். ஆனால் அதுக்குள்ளே நிலா நல்லா மேலே வந்தாச்ச்ச்ச்ச் :( என்ன செய்ய முடியும். 
Posted by Picasa
இருக்கிற அளவிலேயாவது எடுக்கலாம்னு தெருவுக்குப் போனா அப்போவும் கட்டடவேலைக்குப் போட்டிருக்கும் ஷெட்டும் சாமான்கள்னு ஒரே தொந்திரவு. சாமி, இந்த செங்கல், ஜல்லி, சிமெண்டிலே இருந்து எனக்கு என்னிக்கு விடுதலைனு நினைச்சுட்டே கொஞ்சம் தள்ளிப்போய் எடுத்தேன். இருட்டிலே ஜூம் பண்ணறதுக்குப் பதிலாச் சின்னது பண்ணி இருக்கேன்னு படத்தை அப்லோட் பண்ணினால் தான் தெரியுது! :((((  
Posted by Picasa
போகட்டும், நம்ம அதிர்ஷ்டம் தான் தெரிஞ்சு கிடக்கேனு விட்டுட்டேன். வந்த வரைக்கும் போட்டாச்ச்ச்ச்ச்ச்ச்.

6 comments:

  1. என்ன சிரிப்பு?? என்னோட தொழில் நுட்பத்தைப் பார்த்துட்டா? :P

    ReplyDelete
  2. நிலவும் நிலவைப் பிடித்த அனுபவமும் நன்று.

    ReplyDelete
  3. வாங்க ரா.ல. பார்க்கவே முடியலை இப்போ! நலம்தானே!

    ReplyDelete
  4. எப்படியோ ... விடாப்பிடியாய்த் தொடர்ந்து பிடிச்சுட்டீங்க, கீதா! உங்கள் முயற்சி வாழ்க!

    ReplyDelete
  5. @ரசிகை, வாங்க ராஜம் அம்மா, முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete